இன்று எடுக்கும் முடிவு வெற்றியா? 12 ராசிகளின் பலன்!
12 ராசிக்காரர்களுக்கும் இன்று பணவரவு, குடும்ப உறவு, உடல்நலம், தொழில் மற்றும் வியாபாரம் சார்ந்த பலன்கள் எப்படி இருக்கும் என்பதை விரிவாக தெரிந்துகொள்ளுங்கள்!
மேஷம்
இன்று எந்தவொரு விஷயத்திலும் அவசரப்படாமல் நிதானமாகச் செயல்படுவது உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய முயற்சிகளைத் தொடங்குவதற்கு முன்பு அதன் சாதக, பாதக அம்சங்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஆராய்ந்து முடிவு செய்யவும். பிள்ளைகளின் உடல்நிலையில் சிறிய மாற்றங்கள் இருந்தாலும் அலட்சியம் காட்ட வேண்டாம். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும் வாய்ப்பு சிலருக்கு உள்ளது. வெளியிடங்களில் உணவு சாப்பிடுவதைக் குறைத்துக்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சக வியாபாரிகளின் ஆலோசனையை நாடி வருபவர்கள் இருப்பார்கள்.
ரிஷபம்
இன்று திடீரென கிடைக்கும் பணவரவு மனதுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். குடும்ப விஷயங்களில் வாழ்க்கைத்துணையின் ஆதரவும் ஆலோசனையும் முக்கியமானதாக இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். இருப்பினும், அவசரமாக எந்த முக்கிய முடிவையும் எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் தொடர்பாக சுப நிகழ்வுகளுக்கான செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் பணியாளர்கள் விடுப்பில் செல்வதால் வழக்கமான பணிகளில் சிறிய தடங்கல்கள் ஏற்படக்கூடும்.
மிதுனம்
இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்து, நீண்ட நாட்களாக இருந்த சில மனக்குழப்பங்கள் குறையும். எதிரிகளால் ஏற்பட்டுவந்த தொல்லைகள் படிப்படியாக விலகும். செலவுகள் அதிகரித்தாலும் அவை உங்களுக்கு மகிழ்ச்சியையும் திருப்தியையும் தரக்கூடியதாக இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படும். தந்தைவழியில் எதிர்பார்த்திருந்த ஒரு விஷயம் சாதகமாக முடியும். அதே நேரத்தில் சகோதரர்கள் தொடர்பாக சில கருத்து வேறுபாடுகள் உருவாகலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிப்பதுடன் புதிய வாடிக்கையாளர்களும் அறிமுகமாக வாய்ப்பு உள்ளது.
கடகம்
இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். உறவினர்கள் மூலமாக எதிர்பாராத பொருள் அல்லது பணவரவு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. வாகனப் பயணங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். சகோதரர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். வீட்டில் தெய்வ வழிபாடு அல்லது ஆன்மிகம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கும் சூழல் உருவாகக்கூடும். பிள்ளைகள் தொடர்பாக சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் அவற்றை சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
கன்னி
இன்று எதிர்பாராத செலவுகள் அதிகரிப்பதால் மனதில் சிறிது பதற்றம் ஏற்படக்கூடும். குடும்ப விவகாரங்களில் வெளியிலிருந்து வரும் மூன்றாவது நபர்களின் தலையீட்டை அனுமதிக்காமல் இருப்பது நல்லது. தாய்மாமன் வழியில் இருந்து மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சகோதரர்கள் தொடர்பாக சில பிரச்னைகள் அல்லது சங்கடங்களைச் சந்திக்க நேரிடலாம். வாழ்க்கைத்துணையுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கி உறவில் நல்ல புரிதல் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையை உயர்த்துவதற்காக கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
துலாம்
இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பம் தொடர்பான முக்கியமான முடிவுகளை எடுக்க ஏற்ற நாளாக அமையும். சகோதரர்கள் தொடர்பாக மகிழ்ச்சியுடன் செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். உறவினர்கள் மூலம் மனதுக்கு பிடித்த செய்தி கிடைக்கும். தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவதன் மூலம் மனநிறைவு பெறுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வழக்கத்தைவிட கூடுதல் லாபம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
விருச்சிகம்
இன்று மனதில் உற்சாகமும் புத்துணர்ச்சியும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியாக புதிய ஆடைகள் அல்லது ஆபரணங்கள் கிடைக்கக்கூடிய வாய்ப்பு உள்ளது. சகோதரர்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கலாம். இருப்பினும் புதிய முயற்சிகளை இன்றைக்கு தொடங்காமல் இருப்பது நல்லது. வாகனம் ஓட்டும்போது அல்லது பயணம் செய்யும்போது கவனமாக இருக்கவும். கணவன் - மனைவிக்கிடையேயான அன்பும் புரிதலும் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போகலாம்.
தனுசு
இன்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். கையில் தேவையான பணம் இருந்தாலும் எதிர்பாராத மற்றும் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். இதனால் சிலருக்கு தற்காலிகமாக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகலாம். தாய்மாமன் தொடர்பான விஷயங்களில் செலவு ஏற்படலாம். தாயின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அலைச்சல் ஏற்படும். முக்கியமாக, பேசும்போது வார்த்தைகளில் நிதானம் கடைப்பிடிக்கவும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் தேவையைப் புரிந்து அவர்களிடம் இணக்கமாக நடந்துகொள்வது நல்ல பலனைத் தரும்.
மகரம்
இன்று முக்கியமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான பணிகளைக் கூட அலட்சியமாகச் செய்யாமல் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ள வேண்டும். பிறருடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருப்பது மனநிம்மதிக்கு உதவும். எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடிய சூழல் இருந்தாலும் அதே நேரத்தில் திடீர் செலவுகளும் ஏற்படலாம். சகோதரர்கள் தொடர்பாக சில பிரச்னைகள் உருவாகலாம். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம். வியாபாரம் மிதமான நிலையில் இருக்கும்; தேவையற்ற செலவுகள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும்.
கும்பம்
நண்பர்கள் மூலம் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு காரியம் சிறிது தாமதத்துக்குப் பிறகு நிறைவேறும். தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், உங்கள் முயற்சியால் அவற்றைச் சமாளிக்க முடியும். சகோதரர்கள் தொடர்பாக எதிர்பாராத செலவு ஏற்படக்கூடும். தாயின் உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நண்பர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். வியாபாரத்தில் பெரிய மாற்றங்கள் இல்லாமல் வழக்கமான நிலையே தொடரும். புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் அவசரம் காட்ட வேண்டாம்.
மீனம்
இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கக்கூடிய நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும் வாய்ப்பு உள்ளது. கணவன் - மனைவிக்கிடையே அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை உங்களுக்கு சரியான வழிகாட்டுதலாக அமையும். வாழ்க்கைத்துணையின் உறவினர்கள் மூலம் சில ஆதாயங்கள் கிடைக்கலாம். எதிரிகளால் ஏற்பட்ட தடைகள் மற்றும் இடையூறுகள் படிப்படியாக நீங்கும். வியாபாரம் வழக்கமான வேகத்தில் சீராக நடைபெறும்.
What's Your Reaction?

