மேஷம் முதல் மிதுனம் ராசி: இந்த வாரம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு
மேஷம் முதல் மிதுனம் ராசிக்காரர்களுக்கான இந்த வார ராசிபலன்கள் விவரம் இதோ..

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு வருகிற வாரம் ஏப்.2 முதல் ஏப்.8 ஆம் தேதி வரையில் என்ன மாதிரியான அணுகுலம் நிலவும் என்பதனை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. மேற்குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்களின் விவரம் பின்வருமாறு-
மேஷம்:
உயர்வுகள் வரக்கூடிய காலகட்டம். அதேசமயம், உணர்ச்சிவசப்படலைத் தவிருங்கள் பணியிடத்தில் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி இடம்பிடிக்கும். பிறருக்கு வாக்குறுதிகள் எதுவும் தரவேண்டாம்.
வரவை சுபசெலவாக்குவது நல்லது. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். பிறரை நம்பி முதலீடு செய்ய வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சீரான போக்கு நிலவும். கலை,படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். மாணவர்கள் மறதியை மறப்பது நல்லது. வாகனத்தில் நிதானம் முக்கியம். அஜீரணம், அல்சர் உபாதைகள் வரலாம். ஆனைமுகன் வழிபாடு ஆனந்தம் தரும்.
ரிஷபம்:
நல்லவை அதிகரிக்கும் காலகட்டம், நாவடக்கம் முக்கியம். அலுவலகத்தில் அனுகூலக் காற்று வீசும். அதிகாரிகளிடம் வீண் தர்க்கம் வேண்டாம். வீட்டில் விசேஷங்கள் வரத்தொடங்கும்.
வாரிசுகளுடன் மனம் விட்டுப் பேசுங்கள். வரவை சேமிப்பது நல்லது. வழக்குகளில் நிதானம் முக்கியம். செய்யும் தொழிலில் வளர்ச்சி உருவாகும். ஒப்பந்தங்களில் கவனம் அவசியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு சாதகமான சூழல் உருவாகும். கலை, படைப்புத் துறையினர் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் வரும். மாணவர்கள் சோம்பலை விரட்டுவது முக்கியம். ரத்த அழுத்த மாற்றம். பாரம்பரிய உபாதைகள் வரலாம். மகாலக்ஷ்மி வழிபாடு மகிழ்ச்சி சேர்க்கும்.
மிதுனம்:
சீரான போக்கு நிலவும் காலகட்டம். நேரான செயல்களும் நேர்மையும் முக்கியம். பணியிடத்தில் பணிவே நல்லது. யாருடைய குறையையும் பெரிதுபடுத்த வேண்டாம்.
குடும்பத்தில் சுமூகப் போக்கு நிலவும். வாழ்க்கைத் துணை உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். சுபகாரியங்களில் வீண் ரோஷம் வேண்டாம்.பெற்றோர் வார்த்தைகளை மதியுங்கள். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப பலன் கிட்டும். அரசு அனுமதிகளில் அலட்சியம் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். கலை, படைப்புத் துறையினருக்கு கணிசமான வாய்ப்புகள் வரும். துணை உடல்நலத்தில் மாணவர்களுக்கு, அதிகாலைப்படிப்பு நன்மை தரும். தூக்கமின்மை, மன அழுத்தம் வரலாம். சிவன் வழிபாடு சீரான நன்மை தரும்.
( மற்ற ராசிக்களுக்கான ராசிப்பலனை தெரிந்துக்கொள்ள குமுதம் இணையதளத்தினை தொடர்ந்து பின்பற்றவும்)
What's Your Reaction?






