ரூ.52,000ஐ நெருங்கும் 1 சவரன் தங்கம்… கலக்கத்தில் இல்லத்தரசிகள்… காரணம் என்ன?
தங்கத்தின் விலை இன்று (01.04.2024)மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இன்று காலை பவுனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு பவுன் 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கமானது நம்முடைய வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. உலகில் என்னதான் மாற்றங்களை கண்டாலும் தங்கத்தின் மீதான மதிப்பு மற்றும் மோகம் மட்டும் என்றும் நம்மளிடம் இருந்து குறையப்போவது இல்லை.
நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும்பங்கு வகிக்கிறது இந்த தங்கம். தங்கத்தை விரும்பாதவர்கள் எவரும் இல்லை. நாட்டின் பணவீக்கம் உயர்விற்கு மிக முக்கிய ஆதாரமாக கருதப்படும் தங்கத்தில் இந்திய மக்கள் அதிகளவு முதலீடு செய்து, பயன்படுத்துவதே தங்கம் விலை உயர்வதற்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.
தங்கத்தின் விலை இந்த ஆண்டு 10 முதல் 15 சதவிகிதம் வரை அதிகரிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர். 2025ஆம் ஆண்டுக்குள் தங்கம் ஒரு கிராம் 7500 - 8000 ரூபாய் வரை செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் ஒரு கிராம் தங்கம் 85 ரூபாய் உயர்ந்து 6,455 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று காலை பவுனுக்கு 680 ரூபாய் உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரண தங்கம் ஒரு பவுன் 51 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச பொருளாதாரத்தின் நிலையற்ற தன்மையால் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகரித்துள்ள நிலையில், தங்கம் விலை அதிகரித்து வருகிறது என்று பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர். இனி வரும் காலங்களில், தங்கம் விலை மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
What's Your Reaction?