அதிர்ச்சி... சிலிண்டர் விலை உயர்வு...
வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட காஸ் சிலிண்டர் விலை சற்று உயர்ந்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் அவ்வப்போது சிலிண்டர் விலையை உயர்த்தியும், குறைத்தும் அறிவிக்கின்றன. இந்த அறிவிப்புகள் மாதத்தின் முதல் நாளில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி இன்று (மார்ச் 1) வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்திருக்கிறது. அதன்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.23.50 உயர்ந்து, ரூ.1,960-க்கு விற்பனையாகிறது.
அதே நேரம் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதனால் வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.918.50 என்ற அளவிலேயே தொடர்கிறது.
What's Your Reaction?