காந்தியடிகளின் 77-வது நினைவு நாள்.. ஆளுநர் மலர்தூவி மரியாதை !

காந்தியடிகளின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

Jan 30, 2024 - 14:10
காந்தியடிகளின் 77-வது நினைவு நாள்.. ஆளுநர் மலர்தூவி மரியாதை !

காந்தியடிகளின் 77-வது நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆளுநர் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். 

சென்னை எழும்பூர், அரசு அருங்காட்சிய வளாகத்தில்  காந்தியடிகள் 77-வது நினைவு நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் அமைச்சர்கள் சேகர்பாபு, சுவாமிநாதன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார் சட்டமன்ற உறுப்பினர் ஐ ட்ரீம்ஸ் மூர்த்தி உள்ளிட்டோர் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக காந்தியடிகள் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை"  என்று அழைக்கப்படுகிறார். மேலும் இவர் மகாத்மா காந்தி என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. காந்தியடிகளின்  பிறந்தநாளை நாடு முழுவதிலும் காந்தி ஜெயந்தி என அனுசரிக்கப்பட்டும், ஒவ்வொரு ஆண்டும் காந்தியின் நினைவு நாளுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை அருகே  மரியாதை செலுத்தப்படும்.

மேலும் இந்த ஆண்டு மெட்ரோ பணிகள் காரணமாக தற்காலிகமாக காந்தியின் சிலை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு இருப்பதால் இந்த ஆண்டு சென்னை எழும்பூர் அருங்காட்சிய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த காந்தியின் திருவுருவ சிலைக்கும் கீழே வைக்கப்பட்டிருந்த திரு உருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பிலும் ஆளுநர் RN ரவியும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow