ஐ ஆர் எஸ் அதிகாரி பாலமுருகன் பணியிடை நீக்கம் !

ஐ ஆர் எஸ் அதிகாரியும் துணை ஆணையருமான பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

Jan 30, 2024 - 14:57
ஐ ஆர் எஸ் அதிகாரி பாலமுருகன் பணியிடை நீக்கம் !

ஐ ஆர் எஸ் அதிகாரியும் துணை ஆணையருமான பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஏழை விவசாயிகளான கிருஷ்ணன், கண்ணையன். இவர்களுக்கு சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை சேலம் மாவட்ட பாஜக பொறுப்பாளர் குணசேகரன் என்பவர் விலைக்கு கேட்டுள்ளார்.  ஆனால் அவருக்கு நிலத்தை விற்க விவசாயிகள் விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் காவல்துறை, வருவாய்த்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகளின் துணையோடு குணசேகரன் தனது பெயருக்கு நிலத்தை போலி பத்திரம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி  வங்கிக் கணக்கில் வெறும் 500 ரூபாய் மட்டுமே வைத்துள்ள அந்த விவசாயிகள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக  அமலாக்கத்துறை  மூலம்  நோட்டீஸ் அனுப்பவும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து அமலாக்கத்துறை சார்பில் விவசாயிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நோட்டீஸில் அவர்களின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில், மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை பதவி நீக்கம் செய்யக்கோரி, குடியரசு தலைவருக்கு சென்னை ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது : இந்த சம்பவத்திற்கு பொறுப்பேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார் பாலமுருகன். விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததால், விவசாயிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்று தனது கடிதத்தில் பாலமுருகன் குறிப்பிட்டு இருந்தார். 

இந்நிலையில் ஐ ஆர் எஸ் அதிகாரியும் துணை ஆணையருமான பாலமுருகன் நாளை ஓய்வு பெற இருந்த நிலையில் இன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். ஓய்வு பெறுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னராகவே விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow