சேலம்: மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவை அபகரிக்க முயற்சிப்பதாக புகார்

கலைஞர் சிலை அமைக்க எங்கள் குடும்பத்தார் அதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.

Dec 13, 2023 - 17:04
Dec 13, 2023 - 19:59
சேலம்: மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவை  அபகரிக்க முயற்சிப்பதாக புகார்

மாடர்ன் தியேட்டர்ஸ் நினைவு வளைவை திமுக அபகரிக்கிறதா? என கேள்வி எழுந்துள்ளது.

தமிழ்நாட்டில் சேலத்தில் ஏற்காடு சாலையில் உள்ளது மாடர்ன் தியேட்டர்ஸ்.இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் 150க்கு மேற்பட்ட படங்கள் தயாரித்துள்ளது. 1935ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிறுவனம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ். தென்னிந்தியாவில் முதல் முறையாக உருவாக்கப்பட்ட பெரிய திரைப்படக்கூடம்.

மாடர்ன் தியேட்டர்ஸ் ஆண்டுக்கு மூன்று படங்களையாவது உருவாக்கிக் கொண்டிருந்தது. முதல் முறையாக வண்ணப் படம் தயாரித்த பெருமையும் இந்த மாடர்ன் தியேட்டருக்கு உண்டு. சினிமா தயாரிப்பு என்றாலே கொல்கத்தா தான் என்று நிலை இருந்தது. இந்த நிலையை தனது சினிமா தயாரிப்பு மீதான ஆர்வத்தால் மாற்றிக் காட்டினார் டி.ஆர்.எஸ். முன்னாள் முதல்வர் கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருக்கு திருப்புமுனையாக இருந்த இடம் தான் மாடர்ன் தியேட்டர்ஸ். கலைஞரின் முன்னேற்றத்திற்கு படியாக அமைந்தது மாடர்ன் தியேட்டர்ஸ்.

 சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் மாடர்ன் தியேட்டர் ஸ்டுடியோவின் நினைவு ஆர்ச் மட்டும் உள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேலம் வந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் ஆர்ச் முன்பு நின்று  செல்பி எடுத்தது குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தான் இந்த மாடல் தியேட்டர்ஸ் நினைவு ஆர்ச் அமைந்துள்ள இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் சிலையை வைக்க முதல்வர் சேலம் வந்திருந்தபொழுது மாடர்ன் தியேட்டர்ஸ் குடும்பத்தை அழைத்து பேசியதாக கூறப்படுகிறது.

மாவட்ட ஆட்சியராக உள்ள கார்மேகம் கடந்த ஐந்து முறை இந்த குடும்பத்தை அழைத்து ஆர்ச் அமைந்த பகுதியில் கலைஞர் சிலை வைக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.இதுவரை இந்த குடும்பத்தார் எந்த ஒரு முடிவையும் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மாடர்ன் தியேட்டர்ஸ் தேசிய நெடுஞ்சாலை இடத்தில் உள்ளதாகவும், இது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது என்று கூறி அந்த பகுதியில் அளவீடு செய்து கல்நட்டு சென்றுள்ளனர். மேலும் அந்த பகுதியில் ஒரு அறிவிப்பு பதாகைகளையும் வைத்துள்ளனர் 

அதற்கு ஒரு படி மேலாக மாடர்ன் ஸ்டேட்டஸ் குடும்பத்தின் கட்டுமான பணிக்காக உள்ள நிலம் ஒன்று கோரிமேடு பகுதியில் உள்ளது.முறையான ஆவணம் பட்டா மற்றும் பத்திரம் அனைத்தும் இவர்கள் பேரில் இருக்கும் நிலையில் நீதிமன்ற வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது.நிலத்தில் சிறிய கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுள்ளது.இதனை இன்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பிரிவு அதிகாரிகள் எந்த ஒரு முன்னறிவிப்பு அனுமதியும் பெறாமல் உள்ளே அத்துமீறி 50 மேற்பட்ட காவல்துறையில் சென்று இடித்து இந்த நிலம் அரசுக்கு சொந்தமானது என்று தெரிவித்து ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர் 

இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் விஜய் ஜெகஸ்வரி பேசுகையில், 'கலைஞர் சிலை அமைக்க நாங்கள் எந்த ஒரு முடிவும் இதுவரை தெரிவிக்காததால் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் மற்றும் அரசு அதிகாரிகள் இதுபோன்று அத்துமீறி அராஜக செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.கலெக்டர்தான் இதற்கு காரணம். நாங்கள் சிலை அமைக்க சொல்லலாம் என்று யோசனையில் இருக்க, இப்படி அதிகாரிகள் அத்துமீறி செயல்படலமா? தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு எங்களை பாதுகாக்க வேண்டும். கலைஞர் சிலை அமைக்க எங்கள் குடும்பத்தார் அதற்கான ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர்.அதற்குள் மாவட்ட ஆட்சியர் இது போன்ற அத்துமீறல் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.இது மன உளைச்சலை தருகிறது.' என்றார்கள். 

மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டால் ' இது மேலிட விவகாரம், விருப்பம். நாங்கள் சொல்வதற்கு ஒன்றுமில்லை.'என்கிறார்கள்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow