மாஜி அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராக பெண் வேட்பாளர்: அறிவாலயம் புது ஸ்கெட்ச்
அதிமுக மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் ராயபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளார். அவருக்கு எதிராக திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்க அறிவாலயம் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.
2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயக்குமாரை திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி வெற்றி பெற்றார். தற்போது 2026 சட்டமன்ற தேர்தலில் ராயபுரம் தொகுதி திமுக தக்க வைத்து கொள்ள விரும்புகிறது. சென்னை ராயபுரம் தொகுதி தி.மு.கவுக்கு சாதகமாக இல்லை என்பதை தமிழக உளவுத் துறை ரிப்போர்ட் தயார் செய்திருக்கிறது. வரக்கூடிய தேர்தலில் ராயபுரத்தில் அ.தி.மு.க சார்பில் மாஜி அமைச்சர் டி.ஜெயக்குமார் போட்டியிடுகிறார்.
அவர் மண்ணின் மைந்தர் என்பதால் வாக்காளர்கள் அ.தி.மு.கவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து ஜெயக்குமாரை வீழ்த்த திமுக வியூகம் வகுத்து வருகிறது. இதையடுத்து தி.மு.க சார்பில் பெண் வேட்பாளரை களம் இறக்கலாமா என்பது ஸ்டாலின் தீவிர ஆலோசனை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர் அரசியலில் சீனியராகவும், வாக்காளர்களுக்கு புதியவராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் பெண் வேட்பாளரை தி.மு.க தலைமை அடையாளம் கண்டுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயக்குமார் தோல்வியை தழுவினார். அதைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் அவரை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் திமுக சார்பில் பெண் வேட்பாளரை களமிறக்க அறிவாலயம் வியூகம் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
What's Your Reaction?

