விஜய்க்கு High Court நோட்டீஸ்... 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு...

பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் வெற்றி பெற்றதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் முதல்வர் விஜய் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Jul 7, 2026 - 11:47
விஜய்க்கு High Court நோட்டீஸ்... 3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவு...

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் , திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற  விஜய்யின் வெற்றிக்கு எதிராக திமுக தரப்பில் மனுதாக்கல்  செய்திருந்தார்கள்.

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், முதலமைச்சரும் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன், ஆகியோரும், அதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுகவின் வேட்பாளர் இனிகோ இருதயராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது,  தேர்தல் பிரமாணப் பத்திரங்களில் தகவல் மறைப்பு, தேர்தல் செலவு விதிகளை மீறியது மற்றும் முறைகேடுகளில் ஈடுபட்டது போன்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் உள்ள ஆவணக் குறைபாடுகளைச் சரிசெய்து திருத்தப்பட்ட மனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனவும், அதனைத் தொடர்ந்து மூன்று வாரங்களுக்குள் முதலமைச்சர் விஜய்  பதிலளிக்குமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

திருச்சி கிழக்கு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியில் ராஜிநாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow