மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. 4 நாட்கள் பிரசார பிளான்! 

வேலூர், தென் சென்னை, நீலகிரி, கோவை, பெரம்பலூர், விருதுநகர் ஆகிய 6 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்

Apr 3, 2024 - 06:12
மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி.. 4 நாட்கள் பிரசார பிளான்! 

தமிழ்நாட்டில் பிரதமர் மோடி 4 நாட்கள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுள்ளது. 

வேட்பாளர்களின் பிரசாரங்களால் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டில் 4 முனைப் போட்டி நிலவுவதால் அரசியல் கட்சிகள் கடுமையாகப் போட்டியிடுகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வரும் 9-ம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி, மாலை 4 மணி அளவில் வேலூரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து வாக்கு சேகரிக்கவுள்ளார். அதைத் தொடர்ந்து, தென் சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனை ஆதரித்து திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரிக்கவுள்ளார்.

அடுத்த நாள் (மார்ச் 10) காலை 11 மணியளவில் நீலகிரி தொகுதி பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து, நீலகிரியில் வாகன பேரணி செல்கிறார். அதைத் தொடர்ந்து, கோவை தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்கிறார் 

அதன் பின்னர் பிப்ரவரி 13-ஆம்  காலை 11 மணியளவில் இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தரை ஆதரித்து பெரம்பலூரில் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார். அதன் பின், 14-ம் தேதி காலை 11 மணியளவில் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து விருதுநகரில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபின் டெல்லி திரும்புகிறார். பிரதமரின் தமிழகம் வருகை அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow