எழும்பூர் அருங்காட்சியாகத்தில் கார்ல் மார்க்ஸ் சிலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை எழும்பூர் அருங்காட்சியாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த கார்ல் மார்க்ஸ் சிலையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
உலகளவில் சமூக மற்றும் பொருளாதாரச் சிந்தனைக்குப் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்திய மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் பொருளாதாரச் சிந்தனைகளை மக்கள் அனைவரும் அறிந்திடும் வகையிலும், அவரது புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 3.4.2025 அன்று சட்டசபையில் விதி எண் 110-ன் கீழ் சென்னையில் கார்ல் மார்க்ஸ்சுக்கு புதிதாக உருவச்சிலை நிறுவப்படும் என அறிவித்தார்.
அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் ரூ.85 லட்சம் மதிப்பீட்டில் சென்னை கன்னிமாரா பொது நூலகம், எழும்பூர் அருங்காட்சியக வளாகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மாமேதை கார்ல் மார்க்ஸ்சின் உருவச்சிலையை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.அதன் பிறகு கார்ல் மார்க்ஸ் பற்றிய சிறப்பு புகைப்பட கண்காட்சியையும் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.
வேல்முருகன் மிஸ்ஸிங்
இந்த நிகழ்ச்சியில் கூட்டணி கட்சி தலைவர்களான செல்வப்பெருந்தகை, வைகோ, வீரபாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆனால் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளார். அப்போது கார்ல் மார்க்ஸ் சிலைக்கு முன்பாக கூட்டணி கட்சி தலைவர்களுக்கு மத்தியில் 'கார்ல் மார்க்ஸ்சுக்கு வீரவணக்கம்' என்று முழக்கமிட்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
What's Your Reaction?

