திடீரென சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

Nov 10, 2026 - 10:29
திடீரென சரிந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி!
Gold Rate

சென்னையில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று (நவ. 10) சவரனுக்கு ரூ.360 குறைந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கம் விலை

கடந்த அக்டோபர் மாதத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்து வந்தது. ஆனால் நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை உயர தொடங்கியது. இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.45 குறைந்து ஒரு கிராம் ரூ.13,210-க்கும், சவரனுக்கு ரூ.360 குறைந்து ஒரு சவரன் ரூ.1,05,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, கடந்த சனிக்கிழமை (நவ.7) சவரனுக்கு ரூ.160 உயர்ந்திருந்த தங்கம் விலை, நேற்று மேலும் அதிகரித்து கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.1,06,040-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலையைப் பொறுத்தவரை இன்று மாற்றமின்றி நிலையாக நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி ரூ.205-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,05,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow