த்ரிஷா குறித்து அவதூறு - முன்ஜாமீன் கோரி மன்சூர் அலிகான் மனு
நடிகை த்ரிஷா குறித்து எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்து தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்
நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்ஜாமீன் கோரி நடிகர் மன்சூர் அலிகான் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
திரைப்பட நடிகை த்ரிஷா கிருஷ்ணன் குறித்து சமூக வளைதளங்களில் அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவாலுக்கு பரிந்துரை செய்தது.
தேசிய மகளிர் ஆணையத்தின் பரிந்துரை அடிப்படையில் தாமாக வழக்கை விசாரணைக்கு எடுத்த காவல்துறையினர் பாலியல் அவதூறு மற்றும் திட்டமிட்டு அவதூறான கருத்துக்களை பரப்புதல் உள்ளிட்ட 2 பிரிவுகளில் கீழ் ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில் இன்று (நவ 23) நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என மன்சூர் அலிகானுக்கு காவல்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இந்நிலையில், தான் அளித்த பேட்டி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், நடிகை த்ரிஷா குறித்து எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்பதால், வழக்கை ரத்து செய்து தனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?