சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி.. அஷ்டம சனியா? டோண்ட் ஒர்ரி... தோஷம் நீங்க பரிகாரம் இருக்கு!

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் தற்போது வக்ர நிலையில் பயணம் செய்கிறார். நவம்பர் மாதம் முதல் நேர் கதியில் பயணம் செய்வார். சனிபகவானின் சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்கு சந்தோஷத்தை தரப்போகிறது சிலருக்கு சங்கடத்தை தரப்போகிறது. சனி வக்ர பெயர்ச்சியால் யாரெல்லாம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.

Jul 1, 2024 - 11:07
சனி பெயர்ச்சி பலன் 2024: ஏழரை சனி.. அஷ்டம சனியா? டோண்ட் ஒர்ரி... தோஷம் நீங்க பரிகாரம் இருக்கு!

ஏழரை சனி: சனி பகவான் ஒரு ராசிக்கு 12ஆம் வீட்டிலும், ஜென்ம ராசியிலும், ராசிக்கு 2ஆம் வீட்டிலும் பயணம் செய்யும் போது ஏழரை சனியாக பயணம் செய்வார். ராசிக்கு 8ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது அஷ்டம சனியாகவும் ராசிக்கு 7ஆம் வீட்டில் பயணம் செய்யும் போது கண்டச்சனியாகவும், நான்காம் வீட்டில் பயணம் செய்யும் போது அர்த்தாஷ்டம சனியாகவும் பயணம் செய்வார். இந்த காலத்தில் சில சங்கடங்களையும் அதன் மூலம் அந்த ராசிக்காரர்களுக்கு படிப்பினைகளையும் கொடுப்பார் சனிபகவான். 

மேஷம்: சனிபகவான்  இப்போது சாதகமான நிலையில் சஞ்சரிப்பதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய கவுரவம் அந்தஸ்து கிடைக்கும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். 

ரிஷபம்: சனி பகவான் ரிஷபம் ராசிக்கு பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் செய்யும் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். மிகப்பெயர் வளர்ச்சியும் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும்.  வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு நல்ல நேரம் கூடி வந்துள்ளது. புது வேலை கிடைக்கும். பதவியில் புது உற்சாகம் பிறக்கும். நிறைய தான தர்மங்கள் செய்யுங்கள் சனிபகவான் அள்ளிக்கொடுப்பார். 

மிதுனம்:   மிதுன ராசிக்காரர்களுக்க பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார்.  உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும். நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள். 

கடகம்: அர்த்தாஷ்டம சனி என்றாலும் அசராமல் பணிகளை செய்கிறீர்கள் காரணம் உங்களின் மன தைரியம்தான். எது வந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று எதிர்கொள்வீர்கள். உடல் ரீதியாக வரும் பிரச்சினைகளை கூட மன ரீதியாக எதிர்கொள்வீர்கள். எத்தனையோ பிரச்சினைகள் சந்தித்து இருக்கிறீர்கள் வேலையில் சங்கடங்களை சந்தித்து இருக்கிறீர்கள். அஷ்டம சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்க சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வெண்ணெய் சாற்றி வழிபடவும்.

சிம்மம்: கண்டச்சனி காலம் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். செய்யும் வேலையிலும் நிதானமும் பொறுமையும் அவசியம். உறவினர்களிடம் பிரச்சினைகள் வரலாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. எத்தனையோ எதிர்ப்புகளை கடந்து வந்திருப்பீர்கள். கண்டச்சனி பாதிப்பு தீர சனிக்கிழமை காக்கைக்கு தயிர் எள் கலந்த சாதம் வைக்கவும் பாதிப்புகள் கட்டுப்படும். 

கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கு முழு அதிகாரத்தையும் சனி பகவான் தருவார். இதுவரை நிறைய சறுக்கலை சந்தித்திருப்பீர்கள். சனி தனது சொந்த வீட்டில் ஆட்சி பெற்று பயணம் செய்யும் இந்த கால கட்டத்தில் கடன் நோய் எதிர்ப்பு போன்றவை கட்டுப்படும். விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. வெற்றிகள் தேடி வரும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். முழு ராஜயோகம் கிடைக்கப் போகிறது. நோய்கள் தீரும் வம்பு வழக்குகள் சாதகமாக முடியும். இது ராஜயோக காலமாகும்.

துலாம்: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். சனி பகவான் வக்ர நிலையில் பயணம் செய்யும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். வேலையில் உங்களுக்கு இருக்கும் பொறுப்புகளை அடுத்தவரை நம்பி ஒப்படைக்க வேண்டாம். சொந்த பந்தங்களிடம் பேசும் போது கவனம் தேவை. எத்தனையோ பிரச்சினைகளை கடந்து வந்திருப்பீர்கள் இனி கவனமாக இருக்க வேண்டும். சனிக்கிழமை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் அதிகரிக்கும். 

விருச்சிகம்:  அர்த்தாஷ்டம சனி வந்து ஆட்டிப்படைக்கிறது. வேலை இழப்பு, நோய் பாதிப்பு என எத்தனையோ சோதனைகள் சங்கடங்களை சந்தித்து வருகிறீர்கள். இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று விரக்தி நிலைக்கே சென்றிருப்பீர்கள். கவலை வேண்டாம் காலம் இருக்கிறது. சனி பகவான் கொடுக்கும் சோதனைகள் உங்களை புடம் போட்ட தங்கமாக மாற்றும். சனிக்கிழமைகளில் அரசமர பிள்ளையாரை சுற்றி உள்ள பிள்ளையாருக்கு பச்சரிசியும் சர்க்கரையும் கலந்து கோலமிட பாதிப்புகள் குறையும். 

தனுசு:  தனுசு ராசிக்காரர்களுக்கு மூன்றாம் இட சனி முயற்சிகளுக்கு வெற்றியை தேடி தரப்போகிறார். தடைபட்டு வந்த திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர் பதவி யோகம் தேடி வரும். புதிய தொழில் அமையும். இனி ராஜ யோகம் தேடி வரப்போகிறது. கலைத்துறையில் இருப்பவர்கள் புகழின் உச்சிக்கு செல்லப்போகிறீர்கள்.  

ஏழரை சனி யாருக்கு?:  கும்ப ராசியில் பயணம் செய்யும் சனிபகவான் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் விரைய சனியாகவும், கும்ப ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனியாகவும் மகர ராசிக்காரர்களுக்கு பாத சனியாகவும் பயணம் செய்கிறார். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு எத்தனையோ சங்கடங்கள் வரலாம். சுப காரியங்கள் நடைபெறுவதில் தடைகளும் தாமதங்களும் உண்டாகும். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை நாளில் சனிஹோரையில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்க வேண்டும். எள் தயிர் கலந்த சாதத்தை சனிக்கிழமை நாளில் காகத்திற்கு வைத்து விட்டு சாப்பிடுவது நல்லது. நீல நிற சங்குபூக்களும் வன்னி மர இலை, வில்வ இலை மாலை கட்டி சனிபகவானை வணங்கலாம். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow