"மறந்தும் இத வாங்கிடாதீங்க": 167 மருந்துகள் தரமற்றவை, 7 மருந்துகள் போலி, மத்திய அரசு எச்சரிக்கை 

மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 167 மருந்துகள் தரமற்றவையாகவும், 7 மருந்துகள் போலியாகவும் இருந்ததைக் கண்டறிந்துள்ளதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

"மறந்தும் இத வாங்கிடாதீங்க": 167 மருந்துகள் தரமற்றவை, 7 மருந்துகள் போலி, மத்திய அரசு எச்சரிக்கை 
167 மருந்துகள் தரமற்றவை, 7 மருந்துகள் போலி

தரமற்ற மற்றும் போலியான மருத்துவ தயாரிப்புகள் உலகளவில் பொது சுகாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகின்றன. தரமற்ற மற்றும் போலியான மருத்துவப் பொருட்கள் ஒரு குறிப்பிடத்தக்க உலகளாவிய சுகாதாரப் பிரச்சினையாகும், இது மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கிறது.  இதனால்  மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு ஒவ்வொரு மாதமும் மருந்துகளை ஆய்வுசெய்து அவற்றின் தரத்தை கணக்கிட்டு வருகிறது. தரமற்ற மருந்துகளை சந்தையில் இருந்து திரும்பப் பெறுவதுதான் இதன் நோக்கம்.

இந்நிலையில், மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு வாரியம் [CDSCO] கடந்த டிசம்பர் மாதம் நடத்திய பரிசோதனையில் 167 மருந்துகள் தரமற்றவை என்று கண்டறிந்துள்ளது. கடந்த டிசம்பரில் மத்திய மருந்து ஆய்வுக்கூடங்கள் 74 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும், மாநில மருந்து பரிசோதனை கூடங்கள் 93 மருந்து மாதிரிகளை உரிய தரத்தில் இல்லை என்றும் கண்டுபிடித்து உள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அந்த மருந்துகளின் பட்டியல் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow