மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு: கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள் 

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. இதனால் மீன்பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல ஆயுத்தமாகி வருகின்றனர். 

மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு: கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள் 
கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள் 

கடலில் மீன்​வளத்​தை பெருக்க, அவற்​றின் இனப்​பெருக்க காலத்தை முன்​னிட்டு ஒவ்​வோர் ஆண்​டும் கோடை​காலத்​தில், நாட்​டின் கிழக்கு கடற்​கரை​யில் அமைந்​துள்ள தமிழகம், ஆந்​திரா உள்​ளிட்ட மாநிலங்​களை ஒட்​டிய வங்​கக்​கடல் பகு​தி​களில் ஏப்​.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையி​லான 61 நாட்​கள் விசைப்​படகு மீனவர்​கள், மீன் பிடிக்க கடலுக்​குச் செல்ல மத்​திய அரசு தடை விதித்​துள்​ளது.

அதே​போல், கேரளம் உள்​ளிட்ட மேற்கு கடற்​கரைப் பகு​தி​களில், அரபிக் கடலில் ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்​களுக்கு மீன்​பிடி தடைக்காலம் அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. தமிழக கடலோர பகு​தி​யில் மீன்​பிடி தடைக்காலம் நில​விய​தால், விசைப்​படகு மீனவர்​கள், ஆழ்​கடலில் மீன்​பிடிக்​கச் செல்​ல​வில்​லை.

இந்த தடைக்​காலத்​தில் தங்​கள் படகு​கள், வலைகளைச் சீரமைக்​கும் பணி​கள், படகு​கள் மற்​றும் இயந்​திரங்​களில் பழுது நீக்​குதல் போன்ற பணி​களில் மீனவர்​கள் ஈடு​பட்டு வந்​தனர். இந்​நிலை​யில், மீன்​பிடி தடைக்​காலம் நாளை (ஜூன் 14) இரவுடன் நிறைவடைகிறது. எனவே ஆழ்​கடலில் மீன்​பிடிக்க விசைப்​படகு மீனவர்​கள் தயா​ராகி வரு​கின்​றனர்.

அதன்​படி, சென்னை காசிமேடு மீன்​பிடித்துறை​முகம், திரு​வள்​ளூர், செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கடலூர், தஞ்​சாவூர், திருவாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுச்​சேரி, கரைக்​கால், புதுக்​கோட்​டை, தூத்​துக்​குடி, திருநெல்​வேலி, ராம​நாத​புரம், கன்​னி​யாகுமரி ஆகிய கடலோர மாவட்​டங்​களில் இருந்து 15 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட விசைப்​படகு​களில் 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மான மீனவர்​கள் கடலுக்​குச் செல்ல தயா​ராகி வரு​கின்​றனர்.

மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்,இறால் உள்ளிட்ட கடல் உணவுகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தற்போது மீன்பிடி தடைக்காலம் நிறைவடைய உள்ளதால் கடல் உணவுகளின் விலை கணிசமாக குறையும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow