உங்க மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் யார்? வெளியான லிஸ்ட்!

மாவட்ட வாரியாக பொறுப்பு அமைச்சர்களை நியமித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

உங்க மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் யார்? வெளியான லிஸ்ட்!

தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை சார்ந்த திட்டப் பலன்களும் பொதுமக்களுக்கு விரைவாகச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு சீறிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகிறது. இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று மற்றும் பல்வேறு இடர்பாடான சூழ்நிலைகளில், இந்தத் திட்டப் பணிகளை மாவட்ட அளவில் கூர்ந்தாய்வு செய்து. விரைவுபடுத்தும் வகையில் ஏற்கனவே இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அலுவலர்களாக (Monitoring Officers) நியமித்து அரசு கண்காணித்து வருகிறது. இதனை மேலும் வலுப்படுத்தும் வகையில், அமைச்சர் பெருமக்களையும் இப்பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு முடிவெடுத்துள்ளது.

அதன்படி அந்தந்த மாவட்ட வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தவும். பொதுமக்களுக்கு சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம். நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகால பணிகளை கூடுதலாக மேற்கொள்ளவும். வருவாய் மாவட்ட வாரியாக அமைச்சர்களை பொறுப்பு அமைச்சர்களாக நியமித்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow