உலகக்கோப்பை கால்பந்து: போஸ்னியா -சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் போஸ்னியா - ஹெர்சகோவினா, சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கால்பந்து உலகக் கோப்பை ஜூன் 11 முதல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 48 அணிகள் பங்கேற்றுவரும் இதில் 32 அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேற, 16 அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறுமென ஃபிஃபா போட்டிக்கான விதிகளை வகுத்துள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து - கனடா அணிகள் மோதின. கனடா, பிசி பிளேஸ் மைதானத்தில் போட்டி தொடங்கியது. முடிவில், சுவிட்சர்லாந்து - கனடா அணிகள் இடையேயான போட்டியில் கனடா அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது சுவிட்சர்லாந்து அணி.
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் கத்தார் - போஸ்னியா & ஹெர்சகோவினா அணிகள் மோதின. அமெரிக்கா, லுமென் பீல்டு-ல் போட்டி தொடங்கியது. முடிவில் கத்தார் -போஸ்னியா & ஹெர்சகோவினா அணிகள் இடையேயான போட்டியில் கத்தார் அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது போஸ்னியா - ஹெர்சகோவினா அணி வெற்றி பெற்றது.
What's Your Reaction?













