வீரர்கள் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை: முன்னாள் வீரர் பகிரங்க குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் அணியின் இயக்குனராக இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டவர் முகமது ஹஃபீஸ். இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு கூட முன்னேற முடியாமல் வெளியேறியது.
இதையடுத்து, அணியின் இயக்குனராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹஃபீஸ் நியமிக்கப்பட்டார். ஆனால், ஆஸ்திரேலிய – நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் பாகிஸ்தான் அணி எதிர்பார்த்த அளவுக்கு சரிவர விளையாடவில்லை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என்ற இழந்த பாகிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரையும் 4-1 என்று பறிகொடுத்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியின் இயக்குனர் பொறுப்பில் இருந்து ஹஃபீஸ் விடுவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர், முன்னாள் கேப்டன் பாபர் ஆஸம் ஆகியோர் உடற்தகுதிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். பாகிஸ்தானில் ஒரு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், ஆஸ்திரேலிய தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் அளவுக்கதிகமான எடையுடன் இருந்ததாக தெரிவித்தார். முகமது ஹஃபீஸின் இந்தப் பேச்சு பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
What's Your Reaction?