It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. உண்மை அழகு!

முதுமையில் பிறரை எதிர்பார்க்காமல் சுதந்திரமாக வாழ உதவும் வகையில் வீட்டையும் எண்ணத்தையும் அமைப்பதே வீட்டின் உண்மையான அழகாகும்.

Sep 15, 2026 - 20:02
It's One Life- வாழ்க்கை வாழ்வதற்கே.. உண்மை அழகு!
One Life

மாலா சங்கர்

"அப்பா, இங்கே ஒரு கைப்பிடி இருக்கே? இது எதுக்கு?" மகன் கேட்டான். அப்பா சிரித்தார். "அது உனக்காக இல்லைப்பா. எனக்காக!" 

"புரியலை?" "எனக்கு வயசானப்புறம், நான் யார் தயவையும் எதிர்பார்க்க வேண்டாம்; யார் கைப்பிடிச்சும் நடக்க வேண்டாம். அதுக்காக!" மகன் அமைதியானான்.

வீடு அழகாக இருந்தது. காலை வெளிச்சம் நிறைந்த அறைகள். நடக்க வசதியான இடங்கள். வழுக்காமல் இருக்கப் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட தரைகள். வசதிகளைத் தரும் நவீன தொழில்நுட்ப அம்சங்கள். ஆனால், அந்த வீட்டின் உண்மையான அழகு அவற்றில் இல்லை.

"நான் உங்களுக்குச் சுமையாக இருக்கக் கூடாது" என்ற அப்பாவின் எண்ணத்திலும், “நீங்கள் எப்போதும் உங்கள் வாழ்க்கையை உங்கள் விருப்பப்படி வாழ வேண்டும்" என்ற மகனின் நிம்மதியிலும் இருக்கிறது.

வயது மாறும்போது, அதற்கேற்ப வீடும் மாற வேண்டும். ஆனால், அது முதுமையை நினைவூட்டும் வீடாக இருக்க வேண்டியதில்லை; சுதந்திரத்தை நினைவூட்டும் வீடாக அமையலாம். உங்களைப் பார்த்துக் கொள்ளும் வீடு... உங்கள் கனவுகளை மெய்ப் படுத்தும் வாழ்க்கைக்காக!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow