அதிரடியாக குறைந்த தங்கம்-வெள்ளி விலை....இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Oct 30, 2026 - 10:19
அதிரடியாக குறைந்த தங்கம்-வெள்ளி விலை....இன்றைய நிலவரம் என்ன தெரியுமா?
today gold price

கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது.  அதன்படி நேற்று முன்தினம் (அக்.28) தங்கம் விலை மீண்டும் உயர்ந்தது. சவரனுக்கு ரூ.480 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும், ஒரு கிராம் ரூ.60 உயர்ந்து ரூ.13,195-க்கும் விற்பனையானது.

அதைத் தொடர்ந்து நேற்று (அக்.29) தங்கம் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன்படி ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,195-க்கும், ஒரு சவரன் ரூ.1,05,560-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், மாத கடைசி நாளான  இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன் படி இன்று 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.155 குறைந்து ஒரு கிராம் ரூ.13,040க்கும், சவரனுக்கு ரூ.1,240 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,320க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. அதன்படி   கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் ரூ.210க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow