ஜான் ஆரோக்கியசாமி VS டிரைவர் ராஜேந்திரன்: நீயா… நானா… மோதி பார்க்கும் பவர் சென்டர்கள் 

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்தவுடன் யார் பவர் சென்டர், யாருக்கு அதிகாரம் அதிகம் என கடும் போட்டி நிலவி வருகிறது. இதில் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமிக்கும், விஜய் டிரைவர் ராஜேந்திரனுக்கும் இடையே அதிகார மோதல் உச்சத்தை எட்டியுள்ளது. 

ஜான் ஆரோக்கியசாமி VS டிரைவர் ராஜேந்திரன்: நீயா… நானா… மோதி பார்க்கும் பவர் சென்டர்கள் 
ஜான் ஆரோக்கியசாமி VS டிரைவர் ராஜேந்திரன்

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை வென்ற தவெக. பிற கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு சர்ச்சைகள் தவெக அரசு சுழன்று கொண்டு இருக்கிறது. ஒரு புறம் டாஸ்மாகில் பாட்டிலுக்கு பத்து ரூபாய், தமிழகம் முழுவதும் மின்வெட்டு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை என அடுத்தடுத்த பிரச்னைகளால் விஜயை எதிர்கட்சிகள் வறுத்தெடுத்து வருகின்றனர். 

இது ஒரு புறம் இருக்க தவெகவில்  யாருக்கு பவர் அதிகம் என்ற கடும் போட்டியும் நிலவி வருகிறது. தவெக உடன் தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி தேர்தலுக்காக ஒப்பந்தம் செய்திருந்தார். ஆனால் ஆட்சி அமைந்த பிறகு தலைமை செயலகத்திலேயே ஜான் குடியேறிவிட்டார். முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து கொண்டு துறைரீதியாக அதிகாரிகளை அழைத்து அட்ராசிட்டி செய்து வருவதாக கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அதுமட்டுமின்றி திமுகவில் கோலோச்சிய அமைச்சர்களின் பட்டியலை ஜான் எடுத்து வைத்து கொண்டு. கடந்த ஆட்சியில் அவர்கள் செய்த முறைகேட்டை பட்டியல் போட்டு தருமாறு ஜான் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருக்கிறாராம். அப்படி வாங்கி இருக்கும் பட்டியலை வைத்து கொண்டு ஜான் திமுக மாஜிக்களிடம் தண்டனையில் இருந்து தப்பிக்க பேரம் பேச ஆரம்பித்து விட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே போன்றே ஜான் ஆரோக்கியசாமி தனக்கு போட்டியாக விஜயின் டிரைவர் ராஜேந்திரன் அவரது மகன் சபரிநாதனை நினைக்கிறாராம். டிரைவர் ராஜேந்திரன் விஜயுடன் நெருக்கமாக இருப்பதுடன், அரசு தொடர்பான சில தகவல்களை அதிகாரிகள் இவர் மூலம் முதல்வர் விஜயிடம் பாஸ் செய்து விடுகிறார்களாம். அதே போல கொறடா சபரிநாதனும் தன் பங்கிற்கு முதல்வர் விஜயிடம் அரசியல் களநிலவங்களை அடிக்கடி தெரிவித்து விடுகிறாராம். இதனால் ராஜேந்திரன் அவரது மகன் சபரிநாதன் ஆகியோரை வீழ்த்த வேண்டும் என ஜான் ஆரோக்கியசாமி காய் நகர்த்தி வருவதாக தவெக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow