சிறையிலிருந்தே தேசத்திற்கு சேவையாற்றுவேன்...அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்...

Mar 22, 2024 - 20:54
சிறையிலிருந்தே தேசத்திற்கு சேவையாற்றுவேன்...அரவிந்த் கெஜ்ரிவால் உருக்கம்...

அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் சிறையில் இருந்தாலும் தேசத்திற்கு சேவையாற்றுவேன் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக மணிஷ் சிசோடியா, சஞ்சய் சிங், தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகரராவின் மகள் கவிதா உள்ளிட்டோரை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு 9 முறை சம்மன் அனுப்பியும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அதனை புறக்கணித்தது வந்தார். இந்த நிலையில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை நேற்று (மார்ச் 21) இரவு கைது செய்தது. 

கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் கைது நடவடிக்கையை கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜரப்படுத்துவதற்கான அரவிந்த் கெஜ்ரிவாலை  அமலாக்கத்துறையினர் அழைத்து வந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால்,  நான் சிறையில் இருந்தாலும் சரி, வெளியில் இருந்தாலும் சரி, நாட்டிற்காக சேவையாற்றுவேன் என்று கூறினார். இதையடுத்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வரும் 28-ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் விதித்து ரோஸ் அவன்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow