இம்மியளவு கூட உண்மை இல்லை.. ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்த கருணாஸ்...

Feb 21, 2024 - 18:56
இம்மியளவு கூட உண்மை இல்லை.. ஏ.வி.ராஜு மீது காவல் ஆணையரிடம் புகார் அளித்த கருணாஸ்...

நடிகை திரிஷா பற்றியும், தன்னை பற்றியும் அவதூறாக பேட்டி அளித்த முன்னாள் அதிமுக பிரமுகர் ஏ.வி.ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் கருணாஸ் புகார் கொடுத்துள்ளார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜு கூவத்தூர் விவகாரம் குறித்தும், அதில் நடிகை திரிஷாவை குறிப்பிட்டும் கூறிய சில கருத்துக்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கருணாஸை தொடர்பு படுத்தியும் ஏ.வி.ராஜு சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரின் பேச்சுக்கு நடிகை திரிஷா உட்பட  திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் நேற்று (பிப்.20) மன்னிப்பு கோரி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் திரிஷா குறித்தும், தன்னை பற்றியும் அவதூறாக பேசிய ஏ.வி.ராஜு மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை காவல் ஆணையரிடம் கருணாஸ் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் உண்மைக்கு மாறாக பொய்யான செய்தியை விளம்பரத்துக்காக ஏ.வி.ராஜு தெரிவித்துள்ளதாகவும், அதில் இமியளவு கூட உண்மையில்லா நிலையில் அவரின் பேச்சால் மிகுந்த மன உளச்சலுக்கு ஆளாகி உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

எனவே ஏ.வி.ராஜு மீதும், பல யூ-ட்யூப் சேனல்கள் மீதும் சட்டபடி நடவடிக்கை எடுத்து அந்த வீடியோ பதிவை நீக்க உத்தரவிட வேண்டும் என்றும் கருணாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow