கூவத்தூரில் திரிஷாவா? "மன்னிக்கக் கூடாது.. அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்” பேரரசு காட்டம்..!

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு வலியுறுத்தியுள்ளார்.

Feb 21, 2024 - 13:30
கூவத்தூரில் திரிஷாவா? "மன்னிக்கக் கூடாது.. அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்” பேரரசு காட்டம்..!

கூவத்தூர் விவகாரத்தில் திரிஷாவை தொடர்புபடுத்தி திமுக முன்னாள் ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு வலியுறுத்தியுள்ளார். 

திரிஷா குறித்த ஏ.வி.ராஜுவின் பேச்சு திரைத்துறையினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.வி.ராஜுவின் கருத்துக்கு நடிகைகள் குஷ்பூ, கஸ்தூரி, காயத்ரி ரகுராமான், சின்மயி, இயக்குநர் சேரன், மன்சூர் அலிகான், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர். 

ஏ.வி.ராஜுவின் பேச்சுக்கு நடிகை திரிஷா கடும் கண்டனம் தெரிவித்ததுடன், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதனால் பதறிப்போன ஏ.வி.ராஜு நேற்று வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், திரிஷா அம்மா என்ன மன்னிச்சிருங்க, நான் பேசியது மாற்றி கூறப்பட்டுள்ளது, முன்னாள் எம்.எல்.ஏ. வெங்கடாசலம், திரிஷா மாதிரி என்று சொன்னாரே தவிர திரிஷா என்று சொல்லவில்லை என்று கூறி விளக்கமளித்தார். 

இந்நிலையில், மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தை போதாது, காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயக்குனர் பேரரசு வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்! அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ, விஷம் இருக்கிறது!. சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது, ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷா அவர்களின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!. 

ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற  ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகது. இந்த மாதிரியான  அநாகரீக செயலுக்கு பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்!" என்று இயக்குனர் பேரரசு தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க :

https://kumudam.com/A.V.-Raju,-who-bought-the-big-fool-by-giving-his-mouth..-Vishal-got-angry..

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow