களமிறங்குமா சிங்கம்? டெல்லி கேப்பிடல்ஸ்-ல் ரிஷப் பந்த்? அட்டகாசமான பயிற்சி வீடியோ..!

2022-ல் கார் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த பந்த், சமீப காலமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Feb 21, 2024 - 13:42
Feb 21, 2024 - 13:44
களமிறங்குமா சிங்கம்? டெல்லி கேப்பிடல்ஸ்-ல் ரிஷப் பந்த்? அட்டகாசமான பயிற்சி வீடியோ..!

2022-ல் கார் விபத்தில் சிக்கியதால் படுகாயமடைந்த பந்த், சமீப காலமாக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், ஐபிஎல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் கேப்டனாக களமிறங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதே சமயம், விக்கெட் கீப்பிங் பணியை பந்த் ஏற்க மாட்டார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், பெங்களூரில் அலூர் மைதனாத்தில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ நேற்று வெளியானது. காயத்தில் இருந்து முழுமையாக குணமடைந்துவிட்ட பந்த், பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளார்.

தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ள பந்த், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பந்த் இல்லாத நிலையில், கடந்த சீசனில் டெல்லி அணிக்கு வார்னர் தலைமையேற்றார்.

இந்திய அணியின் இளம் நட்சத்திரம் ரிஷப் பந்த், மீண்டும் கிரிக்க்கெட் களத்துக்கு வருவது இந்திய ரசிகர்கள் மத்தியில் ஆரவராத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க :

https://kumudam.com/All-of-us-were-like-that..-Do-you-know-Hayden,-Ponting-Michael-Clarke-criticizes-Ben-Duckett

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow