”பெருத்த முட்டாள்” வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிய ஏ.வி.ராஜூ..! விஷாலுக்கு வந்ததே கோபம்..!

நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Feb 21, 2024 - 12:36
”பெருத்த முட்டாள்” வாயைக் கொடுத்து வாங்கிக் கட்டிய ஏ.வி.ராஜூ..! விஷாலுக்கு வந்ததே கோபம்..!

நடிகை த்ரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ அவதூறாக பேசியதற்கு நடிகர் விஷால் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதிமுகவில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட சேலத்தை சேர்ந்த ஏ.வி.ராஜூ, 2017-ம் ஆண்டு கூவத்தூரில் நடிகை த்ரிஷா இருந்ததாக அவதூறு கருத்துகளை தெரிவித்திருந்தார். இதற்கு இயக்குநர் சேரன் உட்பட பல திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். த்ரிஷாவும் தனது எக்ஸ் தளத்தில், இது குறித்து சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என கூறியிருந்தார். இதற்கிடையில் தான் அப்படி பேசவில்லை எனவும், தனது பேச்சிற்கு மன்னிக்கும் படியும் ஏ.வி.ராஜூ வீடியோ வெளியிட்டு இருந்தார். 

இந்த நிலையில் நடிகர் விஷால் ஏ.வி.ராஜூவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், "ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த சக கலைஞரை பற்றி  மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார் என்பதற்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பரப்படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள்" என தெரிவித்துள்ளார். 

மேலும், "உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்கவேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை என்ணி வேதனை அடைகிறேன். இப்படி கீழ்தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக  நல்ல திட்டடங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான். இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை,  சக கலைஞனாகவும், பெண்களை இழிவு படுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்" என கூறியுள்ளார். 

"முன்குறிப்பாக, உங்களின் அறிவற்ற செயலினை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேலை புரியவில்லை என்றால்  உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கேட்டு அறிந்துக்கொள்ளுங்கள்" என தனது அறிக்கையில் நடிகர் விஷால் சாடியுள்ளார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Mark-in-the-very-first-film..-Dada-Saheb-Phalke-Award-for-Best-Actress..-Knocked-up-Nayantara.. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow