Nani: வேட்டையன் இயக்குநரின் அடுத்த ஹீரோ இவரா..? கோலிவுட் டூ டோலிவுட் போகும் தசெ ஞானவேல்!

ஜெய்பீம் திரைப்படம் மூலம் பிரபலமான த செ ஞானவேல், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தை இயக்கி வருகிறார். இதனைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

Apr 6, 2024 - 16:28
Nani: வேட்டையன் இயக்குநரின் அடுத்த ஹீரோ இவரா..? கோலிவுட் டூ டோலிவுட் போகும் தசெ ஞானவேல்!

சென்னை: கூட்டத்தில் ஒருவன் திரைப்படம் மூலமாக இயக்குநராக அறிமுகமான தசெ ஞானவேல், ஜெய்பீம் ரிலீஸாகும் வரை கூட்டத்தில் ஒருவனாகவே இருந்தார். சூர்யா, மணிகண்டன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் தான் தசெ ஞானவேலுக்கு இயக்குநராக தனி அடையாளம் கொடுத்தது. நேரடியாக அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான ஜெய்பீம், தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் படத்தை இயக்கும் வாய்ப்புத் அவரைத் தேடிச் சென்றது.  

அதன்படி, லைகா தயாரிப்பில் உருவாகும் ரஜினியின் தலைவர் 170 படத்தின் இயக்குநரானார் தசெ ஞானவேல். ரஜினியுடன் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் ஆகியோர் நடிக்கும் இந்தப் படத்தின் டைட்டில் வேட்டையன் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டானார். வேட்டையன் ஷூட்டிங் அசுர வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.  

இதனால் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்க ரெடியாகிவிட்டார் சூப்பர் ஸ்டார். அதேபோல் இயக்குநர் தசெ ஞானவேலும் தனது அடுத்த படத்தின் கதை உட்பட ஹீரோவையும் முடிவு செய்துவிட்டாராம். முதலில் சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார் தசெ ஞானவேல். சூர்யா பிஸியாக இருப்பதால் இன்னொரு முன்னணி ஹீரோவை சந்தித்தார், ஆனால் இருவருமே மிஸ் ஆனதால் கடைசியாக டோலிவுட் ஹீரோ நானியுடன் இணையவுள்ளாராம். தசெ ஞானவேல் சொன்ன கதைக்கு நானியும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது.  

வேட்டையன் படப்பிடிப்பு முடிந்ததும் நானி – தசெ ஞானவேல் கூட்டணி பற்றி அபிஸியலாக அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. அதேபோல் இந்தாண்டு இறுதிக்குள் இப்படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என்றும், இதுவும் ஜெய்பீம் போல செம்ம ஸ்ட்ராங்கான கதையாக இருகும் எனவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow