வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ வைரல் ! நெட்டிசன்களால் ட்ரோல் ஆக்கப்படும் BiggBoss முத்துக்குமரன் !
நேற்று தற்கொலை வீடியோ வெளியிட்டு டெலீட் செய்ததைத் தொடர்ந்து இன்று வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோ வைரலாகி வரும் நிலையில் , பிக்பாஸ் முத்துக்குமரன் குறித்து சர்ச்சை சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் ஆக மாறியுள்ளது .
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த முத்துக்குமரன் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளார். வஹிதா பேகம் வெளியிட்ட வீடியோவைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையிலான தொடர்பு குறித்து இணையத்தில் பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன.
வஹிதா பேகம் தற்கொலை முயற்சி
சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வந்த வஹிதா பேகம், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்கொலை முயற்சி தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்ட பரபரப்பை ஏற்படுத்தினார் . அந்த வீடியோவில், தனது இந்த நிலைக்கு முத்துக்குமரன்தான் காரணம் என பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோ வெளியானதாகக் கூறப்படும் சில நேரத்திலேயே, அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த அந்த வீடியோ பதிவுகள் நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
“முத்துக்குமரன்தான் காரணமா?”
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் பகிரப்பட்டுள்ள ஒரு பதிவில், “Bhaiyamma posted suicide video on Instagram before deleting all posts. She said BiggBoss Muthukumar was the reason for it” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அவர் தனது பதிவுகளில் வந்த கருத்துகளை நீக்கி வருவதாகவும், தன்னைப் பற்றி கருத்து தெரிவிப்பவர்களை பிளாக் செய்து வருவதாகவும் அந்தப் பதிவில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
“நான் மருத்துவமனையில் இருக்கிறேன்” - வஹிதா பேகம்
இதற்கிடையே, தான் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகக் குறிப்பிடும் வகையில் வஹிதா பேகம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் " துரதிஷ்டவசமாக மருத்துவமனையில் உயிருடன் இருக்கிறேன் , அதனால் கவலை பட வேண்டாம் " என்று ஸ்டோரியில் குறிப்பிட்டிருந்தார்.
இதனால், அவரது உடல்நிலை குறித்தும் சமூக வலைதளங்களில் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
இந்த நிலையில், முத்துக்குமரனுக்கும் வஹிதா பேகத்துக்கும் இடையே என்ன நடந்தது என்ற விவாதமும் இணையத்தில் தீவிரமடைந்துள்ளது.
“எல்லாமே பொய்யா போச்சு” - வஹிதா பேகம்
இந்த சர்ச்சைக்கு மத்தியில் வஹிதா பேகம் வெளியிட்ட மற்றொரு வீடியோவும் தற்போது கவனம் பெற்றுள்ளது. அதில் முத்துக்குமரனும் வஹிதா பேகமும் ஒன்றாக இருப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அந்தக் காட்சியில் முத்துக்குமரன், வஹிதா பேகத்தின் கன்னத்தை பிடித்தபடி “இந்த மூஞ்ச எனக்கு புடிச்சிருக்கு” என்று கூறுவது பதிவாகியுள்ளதாக சமூக வலைதளப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அந்த வீடியோவுடன் வஹிதா பேகம் வெளியிட்ட பதிவில்,
" அப்படின்னா நீ என்கிட்டே விளையாடிட்ட ரைட்! என்னய ஏமாத்துனதுக்கு ரொம்ப தேங்க்ஸ். அதவிட்டுட்டு வீடியோஸையும் நிறுத்த சொல்லி நீ கெஞ்சாத.
என்கிட்ட பேசிட்டு, நம்ப வச்சீங்களே... அப்போ இருந்த அந்த தைரியத்துல கொஞ்சமாச்சும் யூஸ் பண்ணி, முடிஞ்சா Truth-ஐ பேசிக்கோங்க. இல்லனா உங்களுக்கு என்ன வேணுமோ அதை பண்ணுங்க.
But எனக்கு கால் பண்ணாதீங்க. திரும்பவும் என்னை எதுவும் புஷ் பண்ணாதீங்க. நீங்க சொன்னது எல்லாமே விளையாட்டுக்குத்தான்னு இப்போ புரிஞ்சிடுச்சு
பெரிய தேங்க்ஸ்... எதுக்குத்தான் திரும்பி என்னை காப்பாத்துனீங்களோ தெரியல... என்னால முடியல.
எல்லாமே பொய்யா போச்சு."
என்று கூறியுள்ளார்.
டைட்டில் வின்னர் முதல் ட்ரோல் மெட்டீரியல் வரை?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது பேச்சு, அணுகுமுறை மற்றும் நேர்மையான செயல்பாடுகளால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து டைட்டிலை வென்ற முத்துக்குமரன், தற்போது இந்த விவகாரம் காரணமாக சமூக வலைதளங்களில் கடுமையான விவாதத்தை எதிர்கொண்டு வருகிறார்.
குறிப்பாக, வஹிதா பேகத்தின் பதிவுகள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, சில நெட்டிசன்கள் முத்துக்குமரனை நேரடியாக டேக் செய்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் இந்த விவகாரத்தை வைத்து மீம்ஸ் மற்றும் ட்ரோல் பதிவுகளையும் உருவாக்கி வருகின்றனர்.
உண்மை என்ன? - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
வஹிதா பேகம் வெளியிட்ட பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக முத்துக்குமரனின் தரப்பில் இருந்து தெளிவான விளக்கம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
https://www.instagram.com/reel/DeNwVl_t5DY/?utm_source=ig_web_button_share_sheet
What's Your Reaction?

