நெகடிவ் ரோல்தான் மக்களுக்கு பிடிக்குது.. சுந்தரி 2 டெரர் வில்லி பரதா நாயுடு

சினிமா சீரியல் ரெண்டுமே ரெண்டு கண்ணுதான். வாய்ப்பு வந்தா ரெண்டுமே பண்ணுவேன் என்று சுந்தரி 2 சின்னப்பொண்ணு கூறியுள்ளளார்.சீரியல் வில்லி பரதா நாயுடுவின் பெர்சனல் பக்கங்களைப் பார்க்கலாம்.

Sep 2, 2024 - 16:00
Sep 2, 2024 - 16:01
நெகடிவ் ரோல்தான் மக்களுக்கு பிடிக்குது.. சுந்தரி 2 டெரர் வில்லி பரதா நாயுடு
sundari 2 serial villi actress bharatha naidu


தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் ஹீரோயின்களை விட வில்லிகளுக்குத்தான் அதிக வரவேற்பு கிடைக்கிறது.ஆயிரம் எபிசோடுகளை கடந்து, ஜீ தமிழில் வெற்றிகரமாக ஒளிபரப்பான சீரியல் ‘செம்பருத்தி’. அதில், ‘மித்ரா’ கதாபாத்திரத்தில் வில்லியாக அறிமுகமானவர், பரதா நாயுடு.   சன்டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி 2 சீரியலில் சின்னப்பொண்ணுவாக மிரட்டி வருகிறார். தனது சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார் பரதா நாயுடு.

‘செம்பருத்தி’ சீரியலுக்கு அப்புறம் நீங்க நடிச்ச சீரியல்?

‘‘என்னோட பல வருஷ ஏக்கம், போராட்டம், ஃபெயிலியருக்கு பிறகு, பொக்கிஷமா கிடைச்சதுதான் ‘செம்பருத்தி’ வாய்ப்பு. என் லைஃப்ல நான் மறக்கமுடியாத சீரியல் அது. ‘செம்பருத்தி’ ஒளிபரப்பான டைம்ல நல்ல நேயர்கள் மத்தியில நல்ல ரெஸ்பான்ஸ் இருந்துச்சு. அதுக்கப்புறம் சன் டி.வி.யில ‘தாலாட்டு’, ஜீ தமிழ்ல 'ரெட்டை ரோஜா’னு ரெண்டு சீரியல்கள்ல பாசிடிவ் ரோல்ல நடிச்சேன். ஆனா, என்னைய டெரர் வில்லியாவே பார்த்த மக்களால அந்த பாசிடிவ் கதாபாத்திரங்களை அக்செப்ட் பண்ணிக்க முடியல. சோஷியல் மீடியால பலரும், ‘நீங்க நெகட்டிவ் ரோல் பண்ணுங்க’னு அன்புக் கோரிக்கை வச்சாங்க. அதனால, இப்போ ‘சுந்தரி 2’ல மறுபடியும் வில்லி அவதாரம் எடுத்திருக்கேன்.’’

படங்கள்ல நடிச்சுட்டு சீரியலுக்கு வந்தப்போ எப்படி மேனேஜ் பண்ணீங்க?

‘‘படங்கள்ல நடிக்கும்போது நேட்டிவ் கேரக்டர் பண்ணுவேன். அதனால, லைட் மேக்அப் போதுமானதா இருந்தது. சமயங்கள்ல மேக்அப் இல்லாமகூட நடிச்சதும் உண்டு. அங்க அதுவொரு பிரச்னையா பார்க்கப்படல. ஆனா, சீரியலை பொருத்தவரைக்கும் ஹெவி மேக்அப், காஸ்ட்லி காஸ்ட்யூம்ஸ், நிறைய ஜுவல்லஸ்னு ஒரு ஃபார்மெட் இருந்துச்சு.

அப்போ எனக்கு மேக்அப் சென்ஸ் சுத்தமா கிடையாது. சீரியல்ல நடிக்க ஆரம்பிச்சப்போ எனக்கு சொல்லிக்கொடுக்கவோ, கைடு பண்ணவோ யாருமில்ல. மத்தவங்ககிட்ட நாம கேட்டா, அவங்க என்ன நினைப்பாங்களோன்னு தயக்கமா இருக்கும். அதுக்கப்புறம் ‘செம்பருத்தி’யில நடிக்கும்போது ஃப்ரீ டைம்ல, நார்த் இந்தியா, சூரத்னு போய் நிறைய செலவு பண்ணி, புரஃபஷனல் மேக்அப் கத்துக்கிட்டேன்.

இப்போ நான் புரஃபஷனல் மேக்அப் ஆர்டிஸ்ட்டா இருக்கேன்னா, எனக்கு வந்த நெகட்டிவ் கமென்ட்ஸ்தான் அதுக்குக் காரணம். ‘செம்பருத்தி’ சீரியல்ல நடிக்க வந்த ரெண்டு, மூணு மாசத்துல என்னோட மேக்அப், ஜுவல்லரி, காஸ்ட்யூம்ஸ்னு எல்லாத்துலயும் கவனமா பார்த்துப் பார்த்து பண்ண ஆரம்பிச்சேன். முதல்ல எனக்கு நிறைய நெகட்டிவ் கமென்ட்ஸ் வந்திருந்தாலும், அதைக் கொஞ்சம் கொஞ்சமா மாத்தி, எல்லாருக்கும் பிடிக்குற மாதிரி மாறிட்டேன்.’’

‘சுந்தரி 2’ல நடிக்கிறது எப்படி இருக்கு?

‘‘இந்த சீரியல்ல நான் கமிட் ஆனப்போ என் குழந்தைக்கு நாலு மாசம். அப்போ 80 கிலோ இருந்தேன். டெலிவரியாகி கொஞ்ச நாள்தான் ஆகியிருந்ததால், ஃபிட்னஸ் மெயின்டெயின் பண்ணமுடியல. அதனால என்னோட அப்போதைய போட்டோவ அவங்களுக்கு அனுப்பி, ஓகேவானு கேட்டேன். ‘இந்த கேரக்டர் நீங்க பண்ணா நல்லாருக்கும். எங்களுக்கு ஓகே.தான். கைக்குழந்தை இருக்கிறதால உங்களோட கம்பஃர்டபிள் பார்த்துட்டு சொல்லுங்கன்னு சன் டி.வி., தரப்பில சொன்னாங்க. வீட்ல டிஸ்கஸ் பண்ணேன். அவங்க சப்போர்ட் பண்ணதால ‘சுந்தரி 2’ல நடிக்க வந்தேன். இருந்தும், குழந்தையோட போயிட்டு வர்றதும், அப்போ எனக்கிருந்த ஃபிட்னஸ் கண்டிஷனும்தான், ஷூட்டிங் ஸ்பாட்ல எனக்கு சிரமமா இருந்தது. ஆனா, ‘சுந்தரி டீம்’ல எல்லாருமே அவ்ளோ சப்போர்ட் பண்ணாங்க. அவங்களுக்கு நான் ரொம்ப கடமைப்பட்டிருக்கேன்.’’

நீங்க நடிச்ச படங்கள் பற்றி சொல்லுங்க...

‘‘ஆரம்பத்துல படங்கள்ல நடிக்க வந்து, அங்க சக்சஸ் பண்ணமுடியாம, சீரியல்ல நல்லபடியா நடிச்சுட்டு இருந்தேன். ‘மறுபடியும் எப்போடா படம் நடிப்போம், அங்கயும் நாம சக்சஸ் பண்ணணும்’னு நினைச்சுட்டு இருந்தப்போ, எனக்குக் கிடைச்ச படம்தான் ‘WEB’. அதுல நட்டி சார்தான் லீட் ரோல் பண்ணுறாருனு கேள்விப்பட்டதும் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏன்னா, எனக்கு அவரை முன்னாடியே தெரியும். வெல் விஷரா இருந்து, என்ன என்கரேஜ் பண்ணவர். ரொம்ப ஜாலியா பேசுவாரு; ஃபிரெண்ட்லியா பழகுவாரு. அந்த படம் ரிலீஸ் ஆகி, நல்ல பேர் கிடைச்சது.

அந்தப் படத்துல நடிக்கிறப்போ எனக்குக் குழந்தை இல்ல. ஆனா, படத்தோட ஆடியோ லான்சுக்கு குழந்தையோட நான் போனப்போ, எல்லாரும் ஆச்சரியமா பார்த்தாங்க. ‘நீங்க படம் ரிலீஸ் பண்ணுற கேப்ல, நான் பேபி ரிலீஸ் பண்ணிட்டேன்’னு நட்டி சார்கிட்ட சொல்லி சிரிச்சேன். என் குழந்தையை அவரு மடியில் உட்கார வச்சிக்கிட்டுதான் படம் பார்த்தாரு. அது மறக்க முடியாத மொமன்ட். அடுத்து, தெலுங்குல ‘மரோ த்ரிஷ்யம்’னு பேய் படத்துல நடிச்சேன். இப்போ மறுபடியும்  தெலுங்குல ஒரு புராஜெக்ட் பண்ணிட்டிருக்கேன்.’’  

சீரியல், படம்... எது உங்க சாய்ஸ்?

‘‘சீரியல் பண்ணுற எல்லாருக்குமே, ‘படத்துல நடிக்கணும். தியேட்டர்ல பெரிய ஸ்க்ரீன்ல பார்த்து மக்கள் நம்மளக் கொண்டாடணும்’னு ஆசைப்படுவாங்க. எனக்கு சீரியல், மூவினு எந்த வேறுபாடும் இல்ல. ஏன்னா, நான் படங்கள்லயும் நடிச்சுட்டேன், சீரியலும் பண்ணிட்டிருக்கேன். அதனால, ரெண்டுமே ரெண்டு கண்ணுதான். வாய்ப்பு வந்தா ரெண்டுமே பண்ணுவேன்.’’

சிநேகிதி வாசகிகள், தங்களோட அழகை மேம்படுத்திக்க டிப்ஸ் ஏதாவது சொல்லுங்களேன்...

‘‘தினமும் ஒரு ஜுஸ் எடுத்துக்கங்க. நிறைய தண்ணி குடிங்க. முக்கியமா நல்லா தூங்குங்க. ஏன்னா, என்னதான் நாம வெளிப்புறத்துல மேக்அப் பண்ணாலும், இன் டேக்கர் ரொம்ப முக்கியம். ஹேருக்கு, ஸ்ட்ரைட்னிங், கர்லி, ட்ரையர்ஸ்னு நான் ஏதாவது பண்ணிட்டே இருப்பேன். வாரத்துல ஒருநாள் எண்ணெய் கொதிக்கவைச்சு, அது வார்ம் கண்டிஷனுக்கு வந்தப்புறம் ஆயில் மசாஜ் செஞ்சி, 30 நிமிஷம் ஊறவைச்சு, வாஷ் பண்ணுவேன். இதை தினமும் பண்ணணும்னு அவசியமில்ல. வாரத்துக்கு ரெண்டு நாள் பண்ணா, ரிசல்ட் நல்லா வரும்.’’

  • விஜி பழனிச்சாமி

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow