தனுசு ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தனுசு ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..

Jul 6, 2026 - 19:00
தனுசு ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

தனுசு ராசி பலன்கள்:

உங்க ராசிக்கு அர்த்தாஷ்டம ஸ்தானத்துல சனிபகவான் வக்ரமடையறார்ங்க. இது கவனமாகச் செயல்பட்டா, கஷ்டங்கள் குறையக் கூடிய காலகட்டமாக இருக்கக் கூடிய அமைப்புங்க.

பணியிடத்துலதானுண்டு தன் பணி உண்டுன்னு இருப்பதுதான் நல்லதுங்க யாரிடமும் வீண் பகைமை வேண் டாம்க எந்த சமயத்திலும் உங்க தனிப்பட்ட விஷயத்தை அலுவலகத்துல பேசவேண்டாம்க இயன்ற அளவுக்கு அலைபேசி உபயோகம், அவசியமில்லாத வலைதளத்தில் உலவுவது போன்றவற்றை தவிருங்க. மேலதிகாரிகள் தரக்கூடியவை சிறிய பணியாக இருத்தாலும் சின்சியராகச் செய்யணும்க

குடும்பத்து உறவுகள்கிட்டே மனம்விட்டுப் பேசினா, இல்லத்துல நிம்மதி இடம்பிடிக்கும்சு சுபகாரியங்கள்ல வீண் சந்தேகம் கூடாதுங்க வீடு, மனை வாங்கும்போது வில்லங்கத்துக்கும் விலை தந்துடாம கவனமா இருங்க. விலை உயர்ந்த நகைகள், பொருள்களை வாங்கும்போதும் விற்கும் போதும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசியம்க மூன்றாம் நபரை குடும்பத்துல அனுபதிச்சா, வீடு இரண்டாயிடும்: அவசியமான்னு யோசியுங்க

அரசு, அரசியல்துறையினர், எந்த சமயத்திலும் எச்சரிக்கையாகச் செயல்படறது நல்லதுங்க முகஸ்துதி நபர்களால வீண்பழியும். அவமானமும் ஏற்பட வாய்ப்பு உண்டுங்க. எதையும் முறைபாகக் குறிச்சு வைச்சுக்குங்க

செய்யும் தொழில்ல தளராத முயற்சிகள் அவசியம்க உங்க கிட்டே பணிபுரியும் யாரையும் மனம் நோகும்படி செய்ய வேண்டாம்.. அயல்நாட்டு வர்த்தக ஒப்பந்தங்களை புதுப்பிக்கும்போது நேரடி கவனம் செலுத்துங்க

பெண்கள் தன்னடக்கத்துடன் இருந்தா, தலைநிமிர்ந்து நடக்கலாம்க குலதெய்வ வழியாட்டை தவறாம செய்யுங்க விசேஷங்கள்ல வேண்டாத செலவும். வீனான வார்த்தைகளும் கூடவே கூடாதுங்க. மணப்பேறும் மகப்பேறும் தாமதமானாலும் மனம்போல கைகூடும்க.

பூர்விக சொத்துல இழுபறி வரலாம். இயன்றவரை விட்டுக் கொடுங்க விசேஷ நன்மை கிடைக்கும்.

மாணவர்கள், பெரியவங்க வார்த்தை களுக்கு மதிப்பு குடுங்க வெளிநாட்டுக்கல்வி வாய்ப்புக்காக காத்திருந்தவங்க இப்போ அந்த வாய்ப்பு கைகூடி மகிழலாம்க. கலை படைப்புத் துறையினர், இரவுநேரக் களியாட்டம் இழிவைத் தேடித்தரும் விலகியே இருக்கறதுதான் உத்தமம்க. பெரிய மனிதர்களிடம் பேசும்போது வாக்குல நிதானம் இருக்கட்டும்க

பயணப்பாதையில் கவனச்சிதறல் கூடவே கூடாதுங்க, யாரோ வாகனத் தையும் இரவல் வாங்கி ஓட்டறதை இயன்றவரை தவிர்த்துடுங்க. முதுகு தண்டுவடம், பற்கள், எலும்பு, மூட்டு உபாதைகள் வரலாம்க, வளர்ப்புப் பிராணிகளிடமிருந்து விலகியே இருங்க

வெள்ளிக் கிழமைகள்ல காமாட்சி அம்மனைக் கும்பிடுங்க. முடிஞ்சா ஒருமுறை மாங்காடு அல்லது காஞ்சிபுரம் சென்று காமாட்சி அம்மனை வணங்கிட்டு வங்க. வாழ்க்கை மணக்கும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow