துலாம்- விருச்சிகம்- தனுசு: இந்த 3 ராசில் யாருக்கு நன்மை அதிகம்?
துலாம் முதல் தனுசு ராசிக்காரர்களுக்கான இந்த வார ராசிபலன்கள் விவரம் இதோ..

துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கு வாரம் ஏப்.2 முதல் ஏப்.8 ஆம் தேதி வரையில் என்ன மாதிரியான அணுகுலம் நிலவும் என்பதனை துல்லியமாக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. மேற்குறிப்பிட்ட 3 ராசிக்காரர்களுக்கு இந்த வார ராசிபலன்களின் விவரம் பின்வருமாறு-
துலாம்: தன்னம்பிக்கை அதிகரிக்கும் காலகட்டம். அலுவலகங்களில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூடும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். குடும்பத்தில் குதர்க்கம் தவிருங்கள்.
சகோதர உறவுகளால் ஆதாயம் உண்டு. பெற்றோர் பெரியோர் ஆசிகிட்டும். ஆடை, ஆபரணம் சேரும். யாருக்கும் வாக்குறுதி தரும் முன் யோசியுங்கள். செய்யும் தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு அதிகரிக்கும். கலை, படைப்புத் துறையினர் படைப்பு ரகசியங்களைப் பகிர வேண்டாம். மாணவர்களின் உயர்வுகளுக்கு உத்தரவாதம் கிட்டும். பயணத்தில் உடைமைகள் பத்திரம். மூட்டு, முதுகு, வயிறு உபாதைகள் வரலாம். தன்வந்திரி வழிபாடு தழைக்கச் செய்யும்.
விருச்சிகம்:
முயற்சிகளால் முன்னேற்றம் காண வேண்டிய காலகட்டம். பணியிடத்தில் எதிர்பார்த்த மாற்றங்கள் கைகூடிவரும். பொறுப்புகளில் நேரடி கவனம் தேவை. பணத்தைக் கையாள்வதில் அலட்சியம் கூடாது.
வீட்டில் நிம்மதி இடம்பிடிக்கும். வாழ்க்கைத்துணை வார்த்தைகளைக் கேளுங்கள். வாரிசுகளிடம் வீண் கண்டிப்பு வேண்டாம். கொடுக்கல் வாங்கலை உடனுக்குடன் குறித்துவையுங்கள். பொது இடங்களில் குடும்ப ரகசியம் பேசவேண்டாம். செய்தொழிலில் சோம்பலில்லா உழைப்பு முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு ஆதரவு நிலைக்கும். வாக்கில் நிதானம் முக்கியம், கலைத்துறையினர்க்கு வாய்ப்புகள் வரத்தொடங்கும். மாணவர்களுக்கு மனம்போல மதிப்பெண்கள் உயரும். இரவுப் பயணத்தில் நிதானம் முக்கியம். அடிவயிறு, கால்பாதம் உபாதைகள் வரலாம். நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.
Read also: கடகம் முதல் கன்னி ராசி: விட்டுக்கொடுத்தால் விசேஷங்கள்.. இல்லையென்றால் சிரமம் தான்
தனுசு:
சீரான நன்மைகள் வரும் கால கட்டம். அலுவலகத்தில் பொறுப்பு உணர்வு, திட்டமிடல், நேரம் தவறாமை முக்கியம். இல்லத்தில் இனியவை நடக்கத் தொடங்கும். குடும்ப விஷயங்களை மூன்றாம் நபரிடம் பகிர வேண்டாம்.
தரல் பெறலில் நிதானம் தேவை, சுபகாரியங்களில் ஆடம்பரம் கூடாது. செய்யும் தொழிலில் நேரடி கவனம் முக்கியம். அரசு, அரசியலில் உள்ளோர்க்கு வளர்ச்சி ஆரம்பிக்கும். கலைஞர்கள், எதிர்பாலரிடம் எச்சரிக்கையாகப் பழகுங்கள். மாணவர்களுக்கு சுவனச் சிதறால் கூடாது. வாகனப்பழுதில் அலட்சியம் வேண்டாம். நரம்பு, ரத்தநாள உபாதைகள் வரலாம். இஷ்ட வழிபாடு, வாழ்வில் இனிமை சேர்க்கும்.
( மற்ற ராசிக்களுக்கான ராசிப்பலனை தெரிந்துக்கொள்ள குமுதம் இணையதளத்தினை தொடர்ந்து பின்பற்றவும்)
Read more: மேஷம் முதல் மிதுனம் ராசி: இந்த வாரம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ கணிப்பு
What's Your Reaction?






