மகரம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மகரம் ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..

Jul 6, 2026 - 19:30
மகரம் ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

மகரம் ராசி பலன்கள்:

சனிபசுவான், உங்க ராசிக்கு மூன்றாமிடமான சகோதர ஸ்தானத்துல வக்ரம் அடையறார்ங்க. இந்த அமைப்பு ரத்த பந்த உறவுகளிடம் நீங்க கவனமா இருக்கணும்கறதைக் காட்டுதுங்க. பூர்வீக சொத்திலும் நிதானம் முக்கியம்க மற்றபடி எல்லாமே ஏற்றம்தான்க

அலுவலகத்துல இதுவரை இருந்த இளம்புரியாத பதட்டமும் பயமும் நீங்கும்க உயரதிகாரிகள் பாராட்டும் உடனிருப்போர் ஒத்துழைப்பும் மனதுக்கு நிம்மதி தரும்க எதிர்பார்த்த பதவி. இடமாற்றம், ஊதிய உயர்வுகள் கைகூடிவரும்க இந்த சமயத்துல, மூன்றாம் நபரைக் குறைசொல்லி நீங்க முன்னேற நினைச்சா, வேண்டாத வம்பை விலைகொடுத்து வாங்கறமாதிரி ஆகிடலாம்க இடமாற்றம் வந்தா, தவிர்க்காம ஏற்றுக்குங்க

வீட்டுல சந்தோஷம் இடம்பிடிக்கும்சு. அதேசமயம், சகவாசதோஷமும் சேர்ந்து வரலாம் சுவனமா இருங்க. மணப்பேறும் மகப்பேறும் மனம்போலக் கிட்டும்க வாரிசுகளால் பெருமைகள் சேரும்க வாழ்க்கைத்துணை உடல் நலம் சீராகும்க. சகோதர உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம்க வீடு, மனையில் அவசரம் தவிருங்க தேவையற்ற வாக்குறுதிகள் யாருக்கும் தரவேண்டாம்க சின்னச் சின்ன விஷயத்துக்கும் உணர்ச்சிவசப்படுவதைத் தவிருங்க

செய்யும் தொழில்ல ஆதாயம் அதிகரிக்கும்க ரியல் எஸ்டேட் விவசாயம் கால்நடை வர்த்தகத்துள் முழுகவனம் முக்கியம்க ஏற்றுமதி, இறக்குமதி வாணியம் ஏற்றம் பெறும்க

அரசு, அரசியல்துறை சார்ந்தவங்க, அமோகமான ஆதரவும் ஆதாயமும் பெறக்கூடிய காலகட்டம்.க பழைய நட்பிடம் பகைமை காட்டாம இருந்தா, மேன்மைகள் நிலைக்கும்க. கலை, படைப்புத் துறையினருக்கு வாய்ப்புகள் வாசல்தேடி வரும்க முழுமையான கவனத்தோட முயற்சிகளைத் தொடர்ந்தா, ஏற்றம் ஏசுத்துக்கு பெருமை சேர்க்கும்க

மாணவர்கள் திறமை வெளிப்பட்டு பெருமையும். புகழும் பெறக்கூடிய காலகட்டம்க முன்பின் தெரியாத யாரிடமும் உங்களைப் பற்றிய முழு விவரங்களைப் பகிர்ந்துக்க வேண்டாம்.

பெண்கள், திடீர் அதிர்ஷ்டத்தால பெரும் யோகம் பெறக்கூடிய காலகட்டம்க வாழ்க்கைத் துணையால் பெருமை ஏற்படும்க. சுபநிகழ்ச்சிகளால் குதூகலம் கூடும்க. பெரியவங்க, பெற்றவங்க பாராட்டும் பாசமும் மனதுக்கு மகிழ்ச்சி தரும்க ஆடை ஆபரணப் பொருட்கள் சேரும்சு. ரத்த பந்த உறவுகளிடம் பேசும்போது, உங்க வார்த்தைகள்ல நிதானம் இருந்தா. உங்க அந்தஸ்து உயரும்சு. மணப்பேறும், மகப்பேறும் மனம்போல அமைய, பெற்றோருடன் மனம்விட்டுப் பேசுங்க உடல்நலம் குறித்த வீண் மன பயங்களை விரட்டினாலே வாழ்க்கையை நிம்மதியா வாழமுடியும். புரிஞ்சுக்கறது புத்திசாலித்தனம்க

தொலைதூர பயணங் களை இயன்றவரை பாலிலேயே தொடங்கறதும் குலதெய்வத்தைக் கும்பிட்டுட்டுப் புறப்படறதும் நல்லதுங்க

அடிவயிறு. கீழ்முதுகு, பாதம், அ சார்ந்த உபாதைகள் வரலாம்க தினமும் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்யறது நல்லதுங்க

சனிக்கிழமைகள்ல விநாயகரைக் கும்பிடுங்க. முடிஞ்சா ஒருமுறை பிள்ளையார்பட்டி சென்று கற்பக கணபதியைக் கும்பிட்டுட்டு வாங்க. வாழ்க்கைல களிப்பு நிறையும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow