உணவு டெலிவரி ஆப் மூலம் போதைப்பொருள் சப்ளை - 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்

கைதான 2 பேரும் மெத்தபெட்டமைன் சப்ளை செய்பவர்களாக இருந்துள்ளனர்.

Nov 23, 2024 - 12:07
உணவு டெலிவரி ஆப் மூலம் போதைப்பொருள் சப்ளை - 2 பேரை தட்டித்தூக்கிய போலீஸ்

Porter app மற்றும் swiggy App மூலம் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்த 2 பேரை கைது செய்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

சென்னை அண்ணாசாலை தர்கா பின்புறம் பகுதியில் மெத்தபெட்டமைன் போதைப்பொருளுடன் சிலர் சுற்றுவதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார் சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து சோதனை செய்த போது 12 கிராம் மெத்தபெட்டமைன், 27 போதை மாத்திரைகள் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது. 

இதையடுத்து 2 பேரையும் கைது செய்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். விசாரணையில், கைதானவர்கள் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த மகேஷ், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த பாரூக் என்பது தெரிய வந்தது. இதில் மகேஷின் தந்தை ஆங்கில பத்திரிகை ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், பிபிஏ பட்டதாரி. பாரூக் 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். அண்ணாநகர் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் வசித்து வருவதும் தெரிய வந்துள்ளது. 

இவர்களிடம் இருந்து 12 கிராம் மெத்தபெட்டமைன், 27 போதை மாத்திரைகள், 2 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைதான 2 பேருக்கும் முதாசீர் என்பவர் தான் மெத்தபெட்டமைன் போதைப்பொருளை சப்ளை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இவர் மெத்தப்பட்டமைனை Porter app மற்றும் swiggy app மூலம் அனுப்பிவந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைதான 2 பேரும் மெத்தபெட்டமைன் சப்ளை செய்பவர்களாக இருந்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ளவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow