actress kasthuri: “என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”  - நடிகை கஸ்தூரி பேட்டி

என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி.

Nov 21, 2024 - 18:14
actress kasthuri: “என்னை சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”  - நடிகை கஸ்தூரி பேட்டி

சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவருக்கும் நன்றி என புழல் சிறையில் சிறையில் இருந்து வெளியே வந்த பின் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடந்த போராட்டம் ஒன்றில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசினார். இதற்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மதுரை ஆகிய இடங்களில் கஸ்தூரிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி, தெலுங்கு மக்கள் குறித்து தான் தவறாக பேசவில்லை. நானும் தெலுங்கு மருமகள் தான் என விளக்கம் அளித்தார். இதையடுத்து, நடிகை கஸ்தூரிக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. கஸ்தூரி வீட்டில் இல்லாததால் வீட்டு வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.சென்னை மற்றும் மதுரை போலீசார் தரப்பில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில் 16ம் தேதி இரவு ஆந்திராவில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். பின்னர் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரியை சென்னை எழும்பூர் போலீசார் புழல் சிறையில் அடைத்தனர். வருகிற 29 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரிக்கு ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நடிகை கஸ்தூரிக்கு ஆட்டிசம் பாதித்த மகன் இருப்பதால் மனிதாபிமான அடிப்படையில் கஸ்தூரியின் ஜாமின் மனுவிற்கு காவல்துறை தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.இதைத்தொடர்ந்து நடிகை கஸ்தூரிக்கு நேற்று நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புழல் மகளிர் சிறையில் இருந்து நடிகை கஸ்தூரி இன்று( நவ.21ம் தேதி) வெளியே வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  “ என்னை குடும்பம் போல் பாதுகாத்த நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய வழக்கறிஞர்களுக்கு நன்றி. அரசியல் வித்தியாசம் பாராமல் எனக்கு ஆதரவு தந்த அரசியல் தலைவர்களுக்கு நன்றி. என்னை உயிருக்கு உயிராக நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி. ஆந்திரா, தெலங்கானா மக்களுக்கு மிகப்பெரிய மனமார்ந்த நன்றி. புழல் சிறையில் என்னை நன்றாக நடத்திய அனைவருக்கும் நன்றி. எல்லாவற்றிற்கும் மேலாக சிறு குரலாக இருந்த என்னை, சீறும் புயலாக மாற்றிய அனைவரும் எனது நன்றி” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow