அறுவடை பண்ண விடமாட்றாங்க... ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க... கலெக்டரிடம் கதறிய குடும்பம்!

Feb 28, 2024 - 15:14
Feb 28, 2024 - 15:22
அறுவடை பண்ண விடமாட்றாங்க... ஊரை விட்டு ஒதுக்கி வச்சுட்டாங்க... கலெக்டரிடம் கதறிய குடும்பம்!

பரமக்குடி அருகே சாலை அமைக்க நிலம் தராத குடும்பத்தை, கிராமத்தினர் ஊரை விட்டு ஒதுக்கிவைத்ததால், வயலில் விளைந்த நெல்லைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் வாகவயல் கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரி. இவர் வாகவயல் கிராமத்தில் சாலை அமைக்க நிலம் கொடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவரும் ஊர்க்காரர்களும் சேர்ந்து அவரது குடும்பத்தை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. ஊர் திருவிழா மற்றும் பொது நிகழ்வுகளில் இவர்களது கலந்துகொள்ள விடாமலும் ஊர் தலைவர்கள் தடை விதித்துள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மேலும், இவர்களின் வயலுக்குச் செல்லும் பாதையில் முட்களை அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்துவதாகவும், வயலில் விளைந்த நெற்பயிர்களை அறுவடை செய்ய இயந்திரம் செல்ல வழி கொடுக்காமல் பொதுமக்கள் எதிர்ப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

இதுதொடர்பாக புகார் அளித்தும் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க மறுப்பதாக தெரிகிறது. இந்நிலையில், இரண்டு குழந்தைகள் மற்றும் வயதான பெற்றோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற முனீஸ்வரி, தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையைக் கூறி ஆட்சியரிடம் கதறி அழுதுள்ளார்.. "கடந்த 2006 ஆம் ஆண்டு வாகவயல் கிராமத்தில் சாலை அமைக்க நிலம் கொடுக்காததால் ஊராட்சி மன்ற தலைவரும் ஊர்க்காரர்களும் சேர்ந்து, தங்களை கடந்த பல ஆண்டுகளாக ஒதுக்கி வைத்துள்ளதாகவும், அதன் காரணமாக தங்களின் சொந்த நிலத்தில் விளைந்த நெற்கதிர்களைக் கூட அறுவடை செய்ய முடியாமல் தவித்து வருவதாக கண்ணீர் வடித்துள்ளார். தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு அரசு நியாயம் வழங்க வேண்டும் எனவும் மனு அளித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow