ஏழு கடல் ஏழு மலை MOVIE REVIEW...வெற்றியா? தோல்வியா?

இயற்கையையும் மனித வாழ்வையும் மையமாக வைத்து இயக்குநர் ராம் உருவாக்கியிருக்கும் ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படம், நிவின் பாலி–சூரி பயணத்தின் வழியே அன்பு, காதல் மற்றும் மனிதனின் இயற்கை முரண்களை பேசும் வித்தியாசமான படைப்பாக அமைந்துள்ளது.

Oct 6, 2026 - 20:00
Oct 6, 2026 - 14:58
ஏழு கடல் ஏழு மலை MOVIE REVIEW...வெற்றியா? தோல்வியா?

விமர்சனம், ஏழு கடல் ஏழு மலை

இந்த பூமியில் வாழத் தகுதியானவர்கள் யார்? ஒரு மிகப்பெரிய கேள்வியை எழுப்புகிறார் இயக்குநர் ராம். அதற்கு அவரது பதில் இயற்கையை தன்னிலிருந்து பிரித்துப் பார்க்காமல் இயற்கையோடு பொருந்தி வாழ்பவர்கள் மட்டுமே. 

யாரோ ஒரு பெண் தன் குழந்தைக்கு சொல்லும் கதையாக விரியும் திரைக்களத்தில் தன் அறிவுத்திறன், கற்பனைத்திறன் அனைத்தையும் கொட்டியிருக்கிறார் ராம். நிவின் பாலி, சூரி, அந்த எலி, அதன் குஞ்சுகள் மற்றும் ஒரு சிறுவன்... இந்த பூமியின் பிரதிநிதிகளாய் காலம் எனும் அந்த காலியான ரயில் பெட்டியில் பயணிக்கின்றனர்.

எட்டாயிரம் ஆண்டுகளாக மரணமின்றி இயற்கையோடு பயணிக்கும் நிவின் பாலி... இந்த பூமியே அழிந்தாலும் கவலைப்படாமல் தன் குடும்பத்துக்காக வெளிநாட்டில் உழைத்துக் களைத்து ஊர் திரும்பும் சூரி... ரயில் பயணத்தில் இருவேறு மனநிலை கொண்ட மனிதர்களின் உரையாடல் மூலம் இயற்கைக்கு முரணான மனித குலத்தின் போலித்தனத்தை தோலுரிக்கிறார் ராம்..

காதலும் அன்பும் காலங்களைக் கடந்தது என்பதை நிவின் பாலி அஞ்சலி காதல் மூலம் கவிதை போல் சொல்லியிருப்பது அருமை. தேவதை அஞ்சலி, முகமூடிகள் அற்ற எளிய மனிதன் அஸ்வின் விஜய்யை தாய்மையின் பேரன்புடன் அணைத்துக் கொள்ளும் காட்சி ஓவியம்... யுவனின் இசையும், ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் ஒரு கனவுலகத்தை நம் கண்முன் நிறுத்துகிறது.

உறுத்துவது... இயற்கைக்கும் மனிதனுக்கும் உள்ள முரணை சொல்ல ஏழு கடல் ஏழு மலையை  சுற்ற வேண்டுமா..? நேரிடையாக சொல்லியிருந்தால் இன்னும் நிறைய பேருக்கு சேர்ந்திருக்குமே...

ஏழுகடல் ஏழுமலை - இலக்கில்லாத இரவுப் பயணம்

3 ஸ்டார் (இளையரவி)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow