பிரபல சின்ன திரை நடிகர் ‘அடடே’ மனோகர் மறைவு... அதிர்ச்சியில் திரையுலகம்..!
பிரபல சின்ன திரை நடிகரும், மேடை நாடக கலைஞருமான ‘அடடே’ மனோகர் காலமானதை அடுத்து அவருக்கு திரைத்துறையினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சென்னை குமரன் சாவடியில் குடும்பத்துடன் வசித்து வந்த ‘அடடே’ மனோகர், சிறு வயது முதலே நடிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தார். தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த மனோகர், மேடை நாடகங்களில் நடிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இதுவரை சுமார் 3500க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களில் நடித்துள்ள மனோகர், 6 நாடகங்களை அவரே இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வந்த மனோகர், இன்று காலமானார். இதனையறிந்த அதிர்ச்சியடைந்த திரை பிரபலங்களும் ரசிகர்களும் மனோகர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேடை நாடகங்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் காமெடி கேரக்டர்களில் நடித்துள்ள மனோகர், ‘அடடே’ என்ற ஒரே வசனம் மூலம் மக்களிடம் பிரபலமானார். முக்கியமாக 1986, 1993 ஆண்டுகளில் டிடி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அடடே மனோகர்’ நாடகமும் மக்களிடம் வரவேற்பைப் பெற்றது.
சினிமா, மேடை நாடகங்கள் மட்டுமின்றி வானொலி, தொலைக்காட்சி ஆகியவைகளில் சுமார் 15 தொடர்களிலும் நடித்துள்ளார். 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அடடே மனோகர், விவேக், வடிவேலு ஆகியோருடன் இணைந்து காமெடியில் கலக்கியுள்ளார். மனோகரின் மனைவி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே காலமான நிலையில், தனது மகன்களுடன் வசித்து வந்தார். இந்நிலையில் சில தினங்களாக சிகிச்சையில் இருந்த மனோகர், நேற்று இரவு (பிப்ரவரி 27) காலமானார்.
What's Your Reaction?