அதிர வைக்கும் வசனங்கள்...வெளியானது ‘வேட்டையன்’ பட ட்ரெய்லர்
அநியாயம் நடக்கும் போது அமைதியா இருக்கிறத விட, அதிகாரத்தை போலீஸ் கையில் எடுப்பது தப்பில்லை
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 170வது படமான 'வேட்டையன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஜெய்பீம் இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அமிதாப் பச்சன், பகத் பாசில், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.
முன்னதாக வேட்டையன் படத்தின் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியானது. இப்படம் வருகிற 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையே இந்த படத்தின் ‘மனசிலாயோ’ மற்றும் ஹண்டர் வண்டார் என்ற இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக மனசிலாயோ பாடலுக்கு பலரும் நடனமாடும் வீடியோக்களை எடுத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ‘வேட்டையன்’ படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது வேட்டையன் படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.ஜெய்பீம் படத்திற்கு பிறகு த.செ.ஞானவேலுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைத்துள்ளதால் வேட்டையன் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக ‘அநியாயம் நடக்கும் போது அமைதியா இருக்கிறத விட, அதிகாரத்தை போலீஸ் கையில் எடுப்பது தப்பில்லை’ போன்ற வசனங்கள் ட்ரெய்லரில் இடம் பெற்று அதிரவைத்துள்ளன.
What's Your Reaction?