பூவிருந்தவல்லி அருகே பதுங்கியிருந்த பிரபல ரவுடியை சுற்றிவளைத்துப் பிடித்த போலீஸ்...
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் பூவிருந்தவல்லி அருகே பதுங்கி இருந்த கூலிப்படை தலைவனின் கூட்டாளியை தனிப்படை காவல்துறை கைது செய்தது.
மக்களவைத் தேர்தல் நெருங்குவதால் பூவிருந்தவல்லி அருகே பதுங்கி இருந்த கூலிப்படை தலைவனின் கூட்டாளியை தனிப்படை காவல்துறை கைது செய்தது.
மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக காவல்துறை, சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க ரவுடிகளை கண்காணிக்கும் பணியை தீவிரப்படுத்தி இருக்கின்றனர். அதனடிப்படையில் தேடுல் வேட்டையில் ஈடுபட்ட தனிப்படை காவல்துறையினர், திமுக 188-வது வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு குற்றவாளியும் பிரபல ரவுடியுமான விக்னேஷ் என்கின்ற அப்புவை கைது செய்தனர்.
பூவிருந்தவல்லி அடுத்த உக்கோட்டையில் பதுங்கி இருந்த அப்புவை சென்னை காவல் ஆணையர் உத்தரவின் பேரில் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான தனிப்படையினர் சுற்றிவளைத்து கைது செய்தனர். இதையடுத்து, சென்னை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்ட அப்பு, என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட கூலிப்படைத் தலைவன் முத்து சரவணன் மற்றும் பிரபல ரவுடி பாம் சரவணனின் கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?