வீட்டிற்குள் விளையாடிய குழந்தை.. எமனாக இடிந்து விழுந்த சுவர்... உடல் நசுங்கி பலி.. செங்கல்பட்டில் சோகம்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அருகே சுவர் இடிந்து விழுந்ததில், விளையாடிக் கொண்டிருந்த ஒரு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி அருகே அப்துல்லா தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன். இவர் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழமையான வீட்டில் தனது, மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், அவரது ஒரு வயது மகன் கபிலன் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக வெளிப்பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதில், குழந்தை கபிலன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக தகவலறிந்த கூடுவாஞ்சேரி போலீசார், குழந்தையின் உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சுவர் இடிந்து விழுந்ததில், வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?