துண்டிக்கப்பட்ட சாலை... வேறு வழியில்லாமல் 10 கிலோமீட்டர் சுற்றிச் செல்லும் மக்கள்...

சாலையை துண்டித்து நீர் வரத்து கால்வாய் கட்டும் பணி நிறுத்தப்பட்டதால், திருவள்ளூர் மாவட்டத்தில் வாகன ஓட்டிகள் 10 கிலோமீட்டர் சுற்றிச் சென்று அவதிக்கு ஆளாகிறார்கள்.

Mar 12, 2024 - 09:11

திருவள்ளூர் மாவட்டம் வயலாநல்லூரிலிருந்து சோராஞ்சேரிக்குச் செல்லும் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஏரிக்கு நீர்வரத்து கால்வாய் கட்டும் பணி காரணமாக சாலை துண்டிகப்பட்டுள்ளது. கட்டுமான வேலையும் பாதியில் நிறுத்தப்பட்டு 2 மாதங்களாகின்றன. மாற்றுவழி இல்லாத காரணத்தால் பூந்தமல்லி போன்ற பிரதான பகுதிக்குச் செல்ல வாகனங்கள் 10 கிலோமீட்டருக்கு மேல் சுற்றிச் செல்லும் நிலை இருக்கிறது.

 மக்கள் வேலை செய்யும் பல வணிக நிறுவனங்களும், மக்கள் வசிக்கும் குடியிருப்புகளும் அதிகமாக இருக்கும் பகுதியில், கால்வாய் கட்டுமானப் பணியை நிறுத்தப்பட்டுள்ளது அப்பகுதி மக்களையும், அந்த வழியைப் பயன்படுத்தும் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு கால்வாய் பணியை விரைவாக முடிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow