நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... இன்று சரிந்த தங்கம் விலை!

சென்னையில் இன்று தங்கம் சவரனுக்கு ரூ.400 மற்றும் வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

Jul 11, 2026 - 10:27
நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... இன்று சரிந்த தங்கம் விலை!

தங்கம் விலை ஏற்றம் இறக்கத்தோடு இருந்து வருகின்றது. கடந்த 5 ஆம் தேதி வரை அதிகரித்து வந்த நிலையில் 6 மற்றும் 8 ஆகிய  தினங்களில் தங்கத்தின் விலை குறைந்தது. இதனையடுத்து நேற்று முன்தினம் முதல் விலை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

நேற்று முன்தினம் (09.07.2026) ஒரு கிராம் ரூ 13,320க்கும் ஒரு சவரன் ரூ1,06,560க்கும் விற்பனை ஆனது.அதனைத் தொடர்ந்து நேற்று (10.07.2026) நிலவரப்படி கிராமுக்கு ரூ30ம் சவரனுக்கு ரூ240ம் உயர்ந்து ஒரு கிராம் ரூ 13,350க்கும் ஒரு சவரன் ரூ1,06,800க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 400 குறைந்து ரூ 1,06,400க்கும் கிராமுக்கு ரூ 50 குறைந்து ரூ 13,300க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை போலவே வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ 5 குறைந்து ஒரு கிராம் ரூ 240க்கும் பார் வெள்ளி 2,40,000க்கும் விற்பனையாகிறது.

கடந்த ஐந்து நாட்களாக தங்கத்தின் விலை,10-ஆம் தேதி ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.1,06,800-க்கு விற்பனையானது. அதற்கு முந்தைய 9-ஆம் தேதி ரூ.1,06,560-க்கும், 8-ஆம் தேதி ரூ.1,06,600-க்கும் விற்பனையாகியது. இதற்கு முன்பு 7-ஆம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.1,07,200-க்கும், 6-ஆம் தேதி ரூ.1,08,480-க்கும் விற்பனையாகி இருந்தது.
இதன் மூலம் கடந்த ஐந்து நாட்களில் தங்கம் விலை ஒரே நிலையாக இல்லாமல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது.

தங்கம் விலையை போல கடந்த ஐந்து நாட்களாக வெள்ளியின் விலை ,10-07-2026 அன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கு விற்பனையானது. இதேபோல் 09-07-2026 மற்றும் 08-07-2026 ஆகிய தேதிகளிலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கே விற்பனையாகியது. அதற்கு முந்தைய 07-07-2026 மற்றும் 06-07-2026 ஆகிய தேதிகளில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனையாகி இருந்தது. இதனால் கடந்த ஐந்து நாட்களில் வெள்ளி விலை ரூ.250-இல் இருந்து ரூ.245 ஆக குறைந்து, பின்னர் அதே விலையிலேயே நிலைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow