நகைப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு : தங்கம் விலையில் மாற்றமில்லை, வெள்ளி விலை குறைவு

வார இறுதி நாளான இன்று தங்க விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியும் விலை குறைந்து இருப்பதால் நகைப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட தொடங்கியுள்ளனர். 

நகைப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு : தங்கம் விலையில் மாற்றமில்லை, வெள்ளி விலை குறைவு
Gold prices unchanged, silver prices down

நேற்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ.96 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நிலவரப்படி, கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம், 

பிற்பகல் நிலவரப்படி மேலும் கிராமுக்கு ரூ.120-ம், சவரனுக்கு ரூ.960-ம் என மொத்தம் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கும், ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கும் விற்பனை செய்யப்பட்டது. 


சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு சவரன் ரூ.98 ஆயிரத்து 960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 370-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.6 குறைந்து ரூ.210-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் ஆக விற்பனையாகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow