மார்னிங்கே ஷாக்... மீண்டும் ஏறிய தங்கம் விலை..!

தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்ந்துள்ளதால் காலையிலேயே  நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி.

மார்னிங்கே ஷாக்... மீண்டும் ஏறிய தங்கம் விலை..!

கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று (ஜூன் 15) மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் தங்கம் விலை ரூ.6,000 வரை குறைந்திருந்த நிலையில், இன்று ஒரே நாளில் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமின்றி, 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,10,880-க்கும், ஒரு கிராம் ரூ.13,860-க்கும் விற்பனையானது. 1 கிலோ வெள்ளி ரூ.2,70,000-க்கு விற்பனையாகியது.

இந்நிலையில் இன்று(ஜூன் 15) ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.1,680 உயர்ந்து ரூ.1,12,560-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.210 உயர்ந்து ரூ.14,070-ஐ எட்டியுள்ளது.

அதேபோல், வெள்ளி விலையும் உயர்வை கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.10 அதிகரித்து ரூ.280-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.

டாலர் மதிப்பு சரிவால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், தங்கம் மற்றும் வெள்ளி விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.74,560-க்கு விற்பனையான நிலையில், தற்போது அதன் விலை ரூ.1.12 லட்சத்தை தாண்டியுள்ளது. அதேபோல், கடந்த ஆண்டு ஒரு கிராம் வெள்ளி ரூ.120-ஆக இருந்த நிலையில், இன்று ரூ.280-ஆக உயர்ந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow