குழந்தை வளர்ப்பில் இதுதான் முக்கியம் ..... காஜல் அகர்வால் பகிர்ந்த Parenting Tips!

குழந்தை வளர்ப்பு குறித்து நடிகை காஜல் அகர்வால் கூறியது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Aug 10, 2026 - 21:52
குழந்தை வளர்ப்பில் இதுதான் முக்கியம் ..... காஜல் அகர்வால் பகிர்ந்த Parenting Tips!

குழந்தை வளர்ப்பு என்பது சவாலாக மாறிவரும் சூழ்நிலையில் அதுபற்றி பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துகளை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை காஜல் அகர்வால், ஒரு தனியார் சேனலுக்கு அளித்த நேர்காணலில் குழந்தை வளர்ப்பு குறித்த அவரது சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார். இது பெற்றோர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

காஜல் அகர்வால் தனது 4 வயது மகன் நீலுக்கு உணவு மற்றும் குழந்தை வளர்ப்பு தொடர்பான பல விஷயங்களை கற்றுக்கொடுத்து வருகிறார். குழந்தைகள் எதையும் உடனடியாக பெற வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல், சில விஷயங்களுக்காக காத்திருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் கூறுகிறார்.

விரைவாக உணவு டெலிவரி செய்யும் தளங்களில் உணவு ஆர்டர் செய்வதை தவிர்ப்பதாகக் கூறும் காஜல் அகர்வால், முடிந்தவரை வீட்டில் சமைத்த உணவுகளையே மகனுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார். உணவு எங்கிருந்து வருகிறது, அதை தயாரிக்க எவ்வளவு நேரமும் உழைப்பும் தேவைப்படுகிறது என்பதையும் குழந்தைக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார்.

“பொறுமை என்பது ஒரு பலவீனம் அல்ல; அது ஒரு வாழ்க்கைத் திறன்” எனக் கூறும் அவர், சில விஷயங்களுக்காக காத்திருப்பது மதிப்புக்குரியது என்பதை மகனுக்கு கற்றுக்கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும், உணவுப் பொருள்களில் ரசாயனங்கள் கலக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்துள்ள காஜல், காய்கறிகள், பழங்கள், பால் பொருள்கள் உள்ளிட்டவற்றை முடிந்தவரை தரமாக தேர்வு செய்து, ஆரோக்கியமான உணவை மகனுக்கு வழங்குவதாகக் கூறியுள்ளார்.

கடைகளில் பால் வாங்குவதைத் தவிர்த்து, வீட்டிலேயே தயாரிக்கும் பன்னீர் உள்ளிட்ட பால் பொருள்களை மகனுக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது மிகவும் முக்கியம் என்றும், தினசரி குறிப்பிட்ட நேரத்தை மகனுடன் செலவிடுவதாகவும் காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow