கன்னி ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

கன்னி ராசிக்கான சனி வக்ர பலன்களை(15.7.2026-30.11.2026] கூறுகிறார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ..

Jul 6, 2026 - 17:30
கன்னி ராசிக்கான சனி வக்ர பலன்கள்! - யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

கன்னி ராசி பலன்கள்:

உங்க ராசிக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்துல சனிபகவான் வக்ரமடையறார்ங்க. இது உங்க குடும்ப வாழ்க்கைல விட்டுக்கொடுத்தல் முக்கியம் என்பதைக் காட்டுதுங்க. அதோட பெரும் முதலீடுகள் செய்யும் சமயத்துவ நிதானம் முக்கியம்சு இது இரண்டிலும் கவனமா இருந்தா, மற்றவை எல்லாம் சிறப்பாக நடக்கும்.

அலுவலகத்துல சுமுகமான சூழல் நிலவும்க மேலதிகாரிகளால் உங்க திறமை உணரப்படும்க. அதேசமயம், விண் ரோஷமும் வேண்டாத வாதமும் தவிர்த்தால்தான் ஏமாற்றம் இல்லாத ஏற்றம் ஏற்படும்க பொறுப்புகளை ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுத்தறது நல்லதுங்க. மூன்றாம் நபரின் தவறுக்கு நீங்க தலை குனிஞ்சு நிற்க நேரிடலாம்சு எந்த சமயத்திலும் பொறுப்பு உணர்வோட இருந்தா, இதைத் தவிர்க்கலாம்க சிலருக்கு இடமாற்றம். புதவி மாற்றம் வரலாம்க மறுக்காம ஏற்றுகிட்டா, மனம் மகிழும்படி எதிர்காலம் இருக்கும்க

வீட்டுலவிசேஷங்கள் அடுத்தடுத்துவர ஆரம்பிக்கும்க வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற வாக்குவாதம் தவிர்க்கணும்க வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசினா, அவங்க வாழ்க்கைல சுபகாரியத் தடைகள் நீங்கும்க. செலவுகள்ள நிதானம் முக்கியம்க உங்க வார்த்தைகள்ல குதர்க்கமும், ருத்திக்காட்டலும் தவிர்த்தாள் குதூகலம் நிலைக்கும்க. உங்க வீடுதேடிவரும் உறவுகளை மட்டம் தட்டிப் போறது கூடாதுங்க குடும்பப் பிரச்னைகளை நாலுசுவருக்குள்ள இருக்கற மாதிரியும் மூன்றாம் நபர் தலையீடு இல்லாமலும் பார்த்துகிட்டா வீடு இரண்டாகாம உறவுகள் ஒன்றாக இருக்கும்க

செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. கூட்டுத்தொழில்ல ஆதாயம் அதிகரிக்கும்க மாற்றங்கள் எதிலும் அவசரம் கூடவே கூடாதுங்க குறுக்கு வழியில வெற்றிபெற நினைச்சா, குப்புற விழ நேரிடலாம். உணர்ந்து செயல்படுங்க

பெண்களுக்கு கஷ்டங்கள் விலகி இஷ்டங்கள் ஈடேறக்கூடிய காலகட்டம். அதேசமயம் வாழ்க்கைத் துணை ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாம கேட்டுக்கறது நல்லதுங்க விலகிப்போன சொந்தம் பகை மறந்து வீடேறி வரும்க வாரிசுகளிடம் கண்டிப்பு என்ற பெயர்ல கடுமை கூடாதுங்க. மணமாலையும் மகப்பேறும் இஷ்டதெய்வ வழிபாட்டால கைகூடி வரும்கபூர்வீக சொத்துல விட்டுக்கொடுத்துப்போவதுதான் நல்லதுங்க

அரசியல், அரசுத்துறையினர்க்கு நிதானமும் நேர்மையும் இருந்தா நிம்மதி நிலைக்கும்க பதவி, அதிகாரம் கௌரவத்துல படிப்படிurr ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்ஈ. வெளிநாடு, வெளியூர் செல்லும் வாய்ப்பு வந்தா மறுக்காம சென்று வர்றது நல்லதுங்க

மாணவர்களுக்கு தன்னம்பிக்ை அதிகரிக்கும்சு. முழுமையான சுவனம் வகுப்புல இருக்கறது அவசியம்க. சுலை, படைப்புத் துறையினருக்கு சீரான வளர்ச்சி ஏற்படும்க எந்த சந்தர்ப்பத்திலும் விணா உணர்ச்சிவசப்படறதும் வார்த்தைகளைக் கொட்டறதும் கூடவேகூடாதுங்க

பயணப்பாதையில இருட்டாக இருக்கக்கூடிய இடத்துல தனியே இறங்க வேண்டாம்க. அலுவலகப் பயணங்கள்ல தஸ்தாவேஜுகள் பத்திரம்க

அலர்ஜி, தோல்நிறமாற்றம், சளி, சுவாசக் குழாய் உபாதை, ரத்தத் தொற்றுநோய் உபாதைகள் வரலாம்சு

புதன் கிழமைகள்ல மீனாட்சி யம்மனைக் கும்பிடுங்க. முடிஞ்சா ஒருமுறை மதுரை சென்று மீனாட்சி சொக்கரை வணங்கிட்டு வாங்க. வாழ்க்கை பசுமையாகும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow