விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !

ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ தற்போது வெளியாகியுள்ளது.

Sep 14, 2026 - 18:30
விநாயகர் சதுர்த்தியில் வெளியான ராமாயணா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் !
Jai Jai Ram: Ramayana’s First Song

இந்திய சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘ராமாயணா’ படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ‘ஜெய் ஜெய் ராம்’ என்ற பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

ராமாயணக் கதையை மையமாக வைத்து உருவாகி வரும் இப்படத்தை ‘தங்கல்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய நிதேஷ் திவாரி இயக்கியுள்ளார். இதில் ரன்பீர் கபூர், யாஷ் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரம்மாண்ட இசை கூட்டணி :

பிரமாண்டமாக உருவாகும் இந்த படத்தில், ஆஸ்கார் நாயகர்களான ஏ. ஆர். ரஹ்மான் மற்றும்  பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இருவரும் சேர்ந்து இசையமைப்பது ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்துக்கே கொண்டு சென்றது. 

‘ஜெய் ஜெய் ராம்’ பாடலுக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். குமார் விஸ்வாஸ் பாடல் வரிகளை எழுதியுள்ள நிலையில், பிரபல பின்னணி பாடகர்களான ஸ்ரேயா கோஷல் மற்றும் அர்ஜித் சிங் இணைந்து இப்பாடலை பாடியுள்ளனர்.

பக்தி உணர்வையும் பிரம்மாண்ட இசை அனுபவத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில் உருவாகியுள்ள இந்தப் பாடல், படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

முக்கிய கதாபாத்திரங்களில் ரன்பீர் கபூர் யாஷ், சாய் பல்லவி :

இந்தியாவின் முக்கிய இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ரன்பீர் கபூர் ராமர் கதாபாத்திரத்திலும், யாஷ் முக்கியமான கதாபாத்திரத்திலும், சாய் பல்லவி சீதை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.

மேலும் சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இதனால் இப்படத்தின் நட்சத்திரப் பட்டாளமும் ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியாகும் ராமாயணா :

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டுள்ள ‘ராமாயணா’ திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகிறது. முதல் பாகம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு தீபாவளி வெளியீடாகத் திட்டமிடப்பட்டுள்ளது. முதல் பாடலான ‘ஜெய் ஜெய் ராம்’ வெளியாகியுள்ள நிலையில், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow