இன்றைய ராசிபலன்: எந்த ராசிக்கு பணவரவு? யாருக்கு கவனம் தேவை?

இன்றைய நாள் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி அமையப்போகிறது? யாருக்கு பணவரவு, தொழில் மற்றும் குடும்பத்தில் சாதகமான பலன்கள் கிடைக்கப் போகின்றன? எந்த ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்? உள்ளிட்ட பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

Sep 15, 2026 - 06:27
இன்றைய ராசிபலன்: எந்த ராசிக்கு பணவரவு? யாருக்கு கவனம் தேவை?
today rasi palan

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று காரியங்கள் சாதகமாக முடியும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்படலாம். எதிர்பாராத பணவரவு கிடைத்தாலும், அதற்கேற்ப வீண் செலவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. கணவன்–மனைவி இடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். வியாபாரத்தில் சக வியாபாரிகளின் உதவியால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கலாம்.

நட்சத்திரப் பலன்: அசுவினி நட்சத்திரக்காரர்களுக்கு தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். பரணி நட்சத்திரக்காரர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இன்று தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாளாக அமையும். நண்பர்கள் மூலம் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

நட்சத்திரப் பலன்: கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு வீண் அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். தாய்வழி உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகலாம். பிள்ளைகளின் பிடிவாதம் கோபத்தை ஏற்படுத்தினாலும் பொறுமையுடன் அணுகுவது நல்லது. குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்துச் செல்லவும். அரசாங்க விவகாரங்களில் பொறுமை அவசியம். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது முக்கியம்.

நட்சத்திரப் பலன்: மிருகசீரிடம் நட்சத்திரக்காரர்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணை மூலம் ஆதாயம் ஏற்படலாம். இளைய சகோதரர்கள் உதவி கேட்டு வரலாம். தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை அதிகரிப்பதுடன் லாபமும் எதிர்பார்த்ததைவிட கூடுதலாகக் கிடைக்கலாம்.

நட்சத்திரப் பலன்: புனர்பூசம் நட்சத்திரக்காரர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். எதிர்பாராத பணவரவு கிடைத்தாலும் திடீர் செலவுகள் ஏற்படலாம். சகோதரர்களால் சில சங்கடங்களைச் சமாளிக்க வேண்டியிருக்கும். உறவினர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படாமல் கவனமாக இருக்கவும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். பணியாளர்கள் மூலம் கூடுதல் செலவுகள் ஏற்படலாம்.

நட்சத்திரப் பலன்: மகம் நட்சத்திரக்காரர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். பூரம் நட்சத்திரக்காரர்கள் பெரியவர்களிடம் பேசும்போது பணிவுடன் நடந்துகொள்ளவும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகமான நாளாக இருக்கும். இருப்பினும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன்–மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. எதிர்பாராத வேலைச்சுமையால் சற்று சோர்வு ஏற்படலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பங்குதாரர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

நட்சத்திரப் பலன்: உத்திரம் நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களுடன் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனதில் உற்சாகம் அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பணவரவும், அதே நேரத்தில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். உறவினர்களுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். தாய்வழி உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பக்குவமாகச் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் மற்றும் பங்குதாரர்கள் மூலம் செலவுகள் ஏற்படலாம்.

நட்சத்திரப் பலன்: சித்திரை நட்சத்திரக்காரர்களுக்கு திடீர் செலவுகளால் கையிருப்பு குறையலாம். சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு தாய்வழி உறவினர்களால் காரிய அனுகூலம் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு காரியங்கள் சாதகமாக முடியும். தாய்மாமன் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கலாம். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிகளுக்கு ஆதரவாக இருப்பார். கணவன்–மனைவி இருவரும் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல் இருந்தாலும் பணியாளர்கள் தொடர்பான செலவுகள் அதிகரிக்கலாம்.

நட்சத்திரப் பலன்: விசாகம் நட்சத்திரக்காரர்களுக்கு உறவினர்கள் மூலம் பணவரவு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத்துணை மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் இன்று உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தந்தை வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். பிள்ளைகள் மூலம் பணவரவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் கிடைப்பதுடன் லாபமும் அதிகரிக்கலாம்.

நட்சத்திரப் பலன்: மூலம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்கவும். பூராடம் நட்சத்திரக்காரர்களிடம் சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. குடும்பப் பொறுப்புகளை நிறைவேற்ற சற்று அலைச்சல் ஏற்படலாம். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். அவரிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

நட்சத்திரப் பலன்: உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் மற்றவர்களின் விஷயங்களில் தேவையின்றி தலையிட வேண்டாம். திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு பிற்பகலுக்குமேல் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம். தந்தையின் உடல்நிலையில் கவனம் செலுத்தவும். அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகலாம். மற்றவர்களுடன் பேசும்போது பதற்றத்தைத் தவிர்க்கவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இருக்காது.

நட்சத்திரப் பலன்: அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் உடல்நலத்தில் கவனம் செலுத்தவும். சதயம் நட்சத்திரக்காரர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதைத் தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் அதிகரிப்பதால் கையிருப்பு குறையலாம். கணவன்–மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு பின்னர் நீங்கும். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கலாம். வியாபாரத்தில் விற்பனை சுமாராகவே இருக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்துகொள்வது அவசியம்.

நட்சத்திரப் பலன்: பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பணம் கொடுக்கல்–வாங்கல் விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படவும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow