குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்...

குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா அமல்படுத்தப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மன்னர் சரபோஜி அரசு கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Mar 12, 2024 - 12:17

குடியுரிமை திருத்தச் சட்டம் 2019-ம் ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்ததற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் குடியுரிமை திருத்தச் சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வருவதாக நேற்று அறிவித்தது. இதைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் மாணவர் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி வாயில் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் மத்திய அரசைக் கண்டித்தும் உடனடியாக சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow